Friday, October 31, 2014

On Friday, October 31, 2014 by farook press in ,    
 துணை சபாநாயகர் பொள்ளாச்சி வ.ஜெயராமன், திருப்பூர் மேயர் அ.விசாலாட்சி பல்லடம் .எம்.எல்.,ஏ.பரமசிவம் ஆகியோர் முன்னிலை வகித்து பேசினார்.
விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன், பள்ளி மாணவ-மாணவிகள் 368 பேருக்கு அரசின் விலையில்லா மிதிவண்டி,மற்றும் மடிக்கணினி ஆகியவற்றை வழங்கி பேசியதாவது:-
கல்வித்துறையை மேம்படுத்த மக்கள் முதல்வர் ஜெயலலிதா வழிகாட்டுதலின்படி தமிழக அரசு  திட்டங்களை வழங்கி வருகிறது. தமிழகம் முதன்மை மாநிலமாக வேண்டும் என ஜெயலலிதாவின் நோக்கத்தை நிறைவேற்ற  அரசு கல்விக்காக ரூ.17 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கி பல்வேறு திட்டங்களை வழங்கி வருகிறது.1 முதல் 10 ம் வகுப்பு வரை அனைத்து குழந்தைகளும் கல்வி பெற வேண்டும்; இடைநிற்றலை தடுக்க வேண்டும். என்ற அடிப்படையில் பள்ளிக்குழந்தைகளுக்கு தேவையான அனைத்து பொருட்களும் விலையில்லாமல் வழங்கப்படுகின்றன.எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு மிதிவண்டி, மடிக்கணினி உள்பட 14 வகை பொருட்கள் வழங்கப்படுகின்றன. திருப்பூர் மாவட்டத்தில் மட்டும் 15486 பேருக்கு ரூ.4.92 கோடி மதிப்புள்ள விலையில்லா மிதிவண்டி, மடிக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளது. 
மக்கள் முதல்வர் ஜெயலலிதா திட்டங்களால் தான் இன்றைக்கு கல்வியில் தமிழகம் 20-வது இடத்தில் இருந்து 8-வது இடத்துக்கு முன்னேறி உள்ளது.திருப்பூர் மாவட்டம் 13-வது இடத்துக்கு முன்னேறி உள்ளது.திட்டங்களை  பெற்று தமிழகத்தை நாட்டிலேயே முதன்மை மாநிலமாக உருவாக்கும் வகையில் மாணவ, மாணவியர்கள் நன்றாக படிக்க வேண்டும். மடிக்கணினி மூலம் சர்வதேச அளவில் உங்கள் கல்வித்தரத்தை உயர்த்தி கொள்ளுங்கள்.உங்கள் பள்ளியின் கோரிக்கையை ஏற்று ஜெயலலிதா வழிகாட்டுதல் படி கல்வித்துறை  அமைச்சரிடம் பேசி இங்கு 30 வகுப்பறைகள், 2 ஆய்வகங்கள், 2 கழிப்பறைகள் அமைக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் பேசினார்.
விழாவில் துணை சபாநாயகர் பொள்ளாச்சி வ.ஜெயராமன் பேசும்போது; மக்கள் முதல்வர் ஜெயலலிதாவழிகாட்டுதல்படி உலகத்தில் எந்த பணக்கார நாட்டிலும் இல்லாத திட்டம் மாணவர்களுக்கு சைக்கிள்,, மடிக்கணினி வழங்கும் திட்டம் தமிழகத்தில் செயல்படுத்தப்படுகிறது. 10, 11 ம் வகுப்பு மாணவர்களுக்கு ரூ.500 ம், 12 ம் வகுப்பு மாணவர்களுக்கு ரூ.2000- என ஒவ்வொரு மாணவர்களுக்கும் ரூ.5000 தமிழக அரசு டெபாசிட் செய்கிறது. உலகத்திலேயே தமிழகத்தில் தான் இவ்வளவு சிறப்பான திட்டங்கள் வழங்கப்படுகிறது. இதை பயன்படுத்தி நீங்கள் ( மாணவர்கள்) முன்னேற வேண்டும் என பேசினார்..
திருப்பூர் கலெக்டர் ஜி.கோவிந்தராஜ் பேசுகையில்;தமிழக அரசு பள்ளிக்குழந்தைகள் கல்வித்தரம் உயர்த்த பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. கல்விக்காக தமிழக அரசு மடிக்கணினி, சைக்கிள் உள்பட 14 வகை பொருட்களை விலையில்லாமல் வழங்குகிறது. இதை நன்கு பயன்படுத்தி மாணாக்கர்கள் முன்னேற வேண்டும் என்றார்.
திருப்பூர் மேயர் அ.விசாலாட்சி பேசும்போது, மக்கள் முதல்வர் ஜெயலலிதா வழிகாட்டுதலின்படி மாணவர்களுக்கு சைக்கிள், மடிக்கணினி உள்ளிட்ட பொருட்கள் உங்கள் தாய் தந்தையால் கூட தர முடியாத திட்டங்கள் வழங்கப்படுகிறது.முந்தய காலத்தில் இது போன்ற திட்டங்கள்எதுவும் இல்லை. ஜெயலலிதா வழிகாட்டுதல்படி அவரது அரசே கல்விக்காக  வழங்குகிறது. இதை பயன்படுத்தி ஒவ்வொரு மாணவர்களும்  நன்றாக படிக்க வேண்டும் ; ஜெயலலிதாவிற்கு என்றும் நீங்கள் விசுவாசமாக இருக்க வேண்டும் என்று கூறினார்.
மேலும் பிஷப் உபகரசாமி அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளியில்ரூ.63.30 லட்சம் மதிப்புள்ள மடிக்கணினிகள் 377 மாணவ, மாணவியர்களுக்கும், ரூ.16.30 லட்சம் மதிப்புள்ள மிதிவண்டிகள் 390 மாணவ, மாணவியர்களுக்கும்,, , ஜெயவாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ரூ.2.45 கோடி மதிப்பில் ஆயிரத்து 454 மாணவியர்களுக்கும், நஞ்சப்பா மாநகராட்சி அரசு மேல்நிலைப்பள்ளியில் ரூ.66.15 லட்சம் மதிப்புள்ள மடிக்கணினிகள் 394 மாணவர்களுக்கும் மற்றும் பழனியம்மாள் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, கே.எஸ்.சி.அரசு மேல்நிலைப்பள்ளி, மற்றும் அவினாசி கருவலூர் அரசு மேல்நிலைப்பள்ளி ஆகியவற்றில் விலையில்லா மிதிவண்டி மற்றும் மடிக்கணினி ஆகியவற்றை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் வழங்கினார். 
பல்லடம் எம்.எல்.ஏ ,பரமசிவம் அவினாசி எம்.எல்.ஏ.கருப்பசாமி, துணை மேயர் சு.குணசேகரன்,மாவட்ட ஊராட்சி தலைவர் எம்.சண்முகம், அவினாசி ஒன்றிய குழுத்தலைவர் பத்ம நந்தினி ஜெகதீசன், பேரூராட்சி மன்றதலைவர் ஆர்.ஜெகதாம்பாள் ஆகியோர் வாழ்த்தி பேசினார். மாவட்ட கல்வி அலுவலர் முருகன் வரவேற்றார்.விழாவில் பல்லடம் நகராட்சி துணைத்தலைவர்  வைஸ் பழனிசாமி, மண்டலத்தலைவர்கள் ஜெ.ஆர்.ஜான், வி.ராதாகிருஷ்ணன்,கிருத்திகா சோமசுந்தரம்,நிலைக்குழு தலைவர்கள் அன்பகம் திருப்பதி, வசந்தாமணி, பட்டுலிங்கம், பூலுவபட்டி பாலு, பிரியா சக்திவேல், அவினாசி ஒன்றிய செயலளார் மு.சுப்பிரமணியம், நகர செயலாளர் ராமசாமி, தொகுதி செயலாளர் சேவூர் வேலுசாமி, தொழில் அதிபர் கிளாசிக் போலோ சிவராமன், மாவட்ட கல்வி அலுவலர் கரோலின்,கூட்டுறவு சங்க தலைவர்கள் எம்.மணி, கோகுல், சில்வர் வெங்கடாசலம், மாமன்ற உறுப்பினர்கள் வேலுசாமி, கண்ணப்பன்,செல்வம் லட்சுமி, மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் நவநீதகிருஷ்ணன், உதவி அலுவலர் சாய்பாபா, இடுவம்பாளையம் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மூர்த்தி மற்றும் உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள், கூட்டுறவு சங்க இயக்குனர்கள், பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். 


0 comments: