Sunday, October 12, 2014
ஜெயலலிதா விரைவில் விடுதலையாக வேண்டி மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க. சார்பில் ஆஞ்சநேயர் கோவிலில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் மேயர், துணை மேயர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மக்கள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 15 நாட்களாக கர்நாடகா சிறையில் அடைப்பட்டுள்ளார்.அவரை விடுதலை செய்ய வேண்டி தமிழ்நாடு முழுவதும் அண்ணா தி.மு.க.நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் கோவில்களில் சிறப்பு பூஜைகள் செய்தும் ,யாகம் நடத்தியும், தலைமுடி காணிக்கை செலுத்தியும், கருப்புசட்டைகள் அணிந்தும், மனித சங்கிலி நடத்தியும், அமைதியான முறையில் அறவழியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க. சார்பில் ஜெயலலிதா விரைவில் விடுதலையாக வேண்டி திருப்பூர் பல்லடம் ரோடு, அருண் சில்க்ஸ் அருகில் உள்ள ஸ்ரீ ஜெயவீர ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு பூஜையும், வழிபாடும் நடந்தது இந்த நிகழ்ச்சிக்கு மாநகராட்சி 4-வது மண்டல தலைவர் கிருத்திகா சோமசுந்தரம் தலைமை தாங்கினார். மகளிர் அணி மாநில துணை செயலாளரும், மேயருமான அ.விசாலாட்சி, மாவட்ட இளைஞர் அணி செயலாளர், துணை மேயர் சு.குணசேகரன், வடக்கு தொகுதி செயலாளர் ஜெ.ஆர்.ஜான், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலளார் வி.ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலையில் ஜெயலலிதா விரைவில் விடுதலையாக வேண்டியும், நல்ல உடல்நல ஆரோக்யத்துடன் இருக்க வேண்டியும் 1 மணி நேரம் சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர்.
இதனை தொடர்ந்து 4-வது மண்டலம் சார்பில் காலை 5 மணி முதல், மாலை வரை அபிஷேக, அலங்கார பூஜை உள்ளிட்ட சிறப்பு பூஜைகளுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்து. மேலும் கோவிலுக்கு வந்த பக்தர்கள் அனைவருக்கும் 4வது மண்டலம் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட நிர்வாகிகள், நகர மற்றும் கிளை கழக நிர்வாகிகள், மகளிர் அணியினர், தலைமை கழக பேச்சாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
நீண்டகாலமாக பொருளாதார நெருக்கடியை சந்தித்துவரும் குரோயேஷியா நாட்டின் மக்கள் புதிய அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலில் வாக்களிக்கின்றனர்...
-
மதுரையில் விஜிபி ஹவுசிங் மண்டல அலுவலகத்தை துணைத்தலைவர் செல்வராஜ குத்துவிளக்கேற்றி வைத்தார். உடன் மோகன் சி லாரஸ், வத்சலாதேவி, பொது மே...
-
-
திருப்பூர் ஆக 14: பல்லடம், : பல்லடம் அருகே அனுமதியின்றி செயல்பட்ட ஏ.ஜி . கல்வியியல் கலைக்கல்லூரி அதிகாரிகள் சீல் வை...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருச்சி சென்னை சில்க் ஸ் ஸ்ரீகுமரன் தங்க மாளிகை திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவ மனை மற்றும் கி.ஆ.பெ விஸ்வநாதன் மருத்துவ மனை இ...
-
திருப்பூர் தெற்குத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி வளர்ச்சி நிதியில் மேற்கொள்ளப்படும் பணிகளை கே.தங்கவேல் எம்.எல்...
-
பல ஊர்களில் பல கோடி மோசடியில் ஈடுபட்ட நபர்களான ராஜா என்கிற அழகர்சாமி மற்றும் ரமேஷ் குமார் மல்டி லெவல் மார்க்கெட்டிங் ELFIN நிறுவனத்தை ந...
0 comments:
Post a Comment