Tuesday, October 07, 2014

On Tuesday, October 07, 2014 by farook press in ,    
தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் காலந்தாழ்த்தாது உடனடியாக தொழிலாளர்களுக்கு போனஸ் வழங்க வலியுறுத்தி சிஐடியு சார்பில் திருப்பூரில் வாகனப் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.
திருப்பூர் பெருமாநல்லூரில் திங்களன்று காலை 8 மணிக்கு இந்த பிரச்சார இயக்கத்தை சிஐடியு பனியன் சங்கத் தலைவர் கே.காமராஜ் தொடங்கி வைத்தார். இதைத் தொடர்ந்து பாண்டியன் நகர், போயம்பாளையம் பிரிவு, எஸ்.ஏ.பி.பின்புறம், சிட்கோ, கருவம்பாளையம், பல்லடம் சாலை, காங்கயம் சாலை, ஊத்துக்குளி சாலை உள்பட நகரின் அனைத்துப் பகுதிகளிலும் பனியன் தொழிற்சாலைகள் நிரம்பிய பகுதிகளில் தொழிலாளர்கள் மத்தியில் போனஸ் உரிமையை வலியுறுத்தி பிரச்சாரம் செய்யப்பட்டது.
இதில் சிஐடியு பனியன் தொழிலாளர் சங்க பொதுச் செயலாளர் சி.மூர்த்தி, மாநிலக்குழு உறுப்பினர் டி.குமார், மாவட்ட நி்ர்வாகிகள் பி.முருகேசன், பி.பாலன், ஜி.சம்பத் மற்றும் பனியன் சங்க நிர்வாகிகள் எம்.என்.நடராஜ், கே.நாகராஜ் ஆகியோர் உரையாற்றினர். 
இந்த பிரச்சார இயக்கத்தின் தொடர்ச்சியாக செவ்வாயன்று மாலை குமரன் சிலை அருகில் அனைத்து தொழில் சார்ந்த சிஐடியு சங்கங்கள் சார்பில் போனஸ் கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது.
--------------

0 comments: