Tuesday, October 07, 2014

On Tuesday, October 07, 2014 by farook press in ,    


உடுமலைபேட்டை அரசு பொது நூலகம் கிளை 1ல் எழுத்தாளர் வாசகர் சந்திப்பு நிகழ்ச்சி அக்டோபர் 5ம் தேதி நடைபெற்றது.
இந்நிகழ்வுக்கு நூலக வாசகர் வட்டத் தலைவர் க.லெனின்பாரதி தலைமை வகித்தார். நிர்வாகி கே.முருகேசன் வரவேற்றார். இதில் சிந்தனைப் போர் முழக்கங்கள் என்ற நூல் பற்றி கவிஞர் பெ.ராஜா உரையாற்றினார். நூலகர் பீர்பாஷா, சண்முகசுந்தரம், பிஎஸ்என்எல் துணைக் கோட்ட அதிகாரி தண்டபாணி ஆகியோர் பாராட்டிப் பேசினர். நிறைவாக நூலாசிரியர் சிவசக்தி ராமசாமி ஏற்புரை வழங்கினார். தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப இயக்க ஒருங்கிணைப்பாளர் கே.எஸ்.மணி வாழ்த்திப் பேசினார். முடிவில் கோப்பெருந்தேவி நன்றி கூறினார்.

0 comments: