Tuesday, October 07, 2014

On Tuesday, October 07, 2014 by farook press in ,    
அக்டோபர் 25, 26 ஆகிய நாட்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் தெற்கு ஒன்றிய மாநாடு மங்கலத்தில் நடைபெறுகிறது.
இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கட்சியின் திருப்பூர் தெற்கு ஒன்றியச் செயலாளர் கே.உண்ணிகிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
மங்கலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தெற்கு ஒன்றிய மாநாட்டை சிறப்பாக நடத்துவதற்கு பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இம்மாநாட்டைத் தொடர்ந்து மங்கலம் நால்ரோட்டில் மாபெரும் பொதுக்கூட்டம் நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இம்மாநாட்டிற்கு முன்னதாக தெற்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட கட்சியின் 40 கிளை மாநாடுகள் செப்டம்பர் 28, 29 மற்றும் 30ம் தேதி ஆகிய மூன்று நாட்களிள் நடத்தி முடிக்கப்பட்டு கிளைச் செயலாளர்களும், மாநாட்டுப் பிரதிநிதிகளும் தேர்வு செய்யப்பட்டனர்.
இம்மாநாடுகளில், தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் நியாயவிலைக் கடைகளில் அனைத்து அத்தியாவசியப் பொருட்களையும் முழுமையாக மக்களுக்கு வழங்க வேண்டும். குடிநீர், சாக்கடை, தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வேண்டும், முருகம்பாளையத்தில் சுத்தமான குடிநீர் கேட்டுப் போராடிய மக்கள் மீது காவல் துறை வழக்குப் பதிவு செய்திருப்பதை கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
40 கிளைகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட செயலாளர்கள் விபரம் வருமாறு: பொன்னாபுரம் - அய்யாசாமி, சிட்கோ - செல்வராஜ், சிட்கோ (மாதர்) - காந்திமதி, விஜயாபுரம் - வீரன், நல்லூர் - தங்கமுத்து, ராக்கியாபாளையம் பிரிவு - குணசேகரன், ஜெய்நகர் - சி.சுப்பிரமணியம், வள்ளியம்மை நகர் - துரைசாமி, ஆர்.வி.இ.நகர் - சாமிநாதன், ராக்கியாபாளையம் பிரிவு (மாதர்) - எஸ்.தனபாக்கியம், இந்திராநகர் - செல்வகுமார், செரங்காடு - ஈஸ்வரன், செரங்காடு (மாதர்) - கண்ணம்மாள், செட்டிபாளையம் - கணேசன், வஞ்சிநகர் - தனபால், திருக்குமரன் நகர் - மணி, கல்லாங்காடு - ராஜா, ஜெ.ஜெ.நகர் - ஈஸ்வரன், ஏ.பி.நகர் - ரவிச்சந்திரன், ஏ.பி.நகர் (மாதர்) - சுந்தரி, பாரதிநகர் - ஆர்.குமார், குப்பாண்டம்பாளையம் - குமார், சுண்டமேடு - செல்வராஜ், முருகம்பாளையம் - சின்னசாமி, பெரியார்நகர் - சரஸ்வதி, பகவதிநகர் (மாதர்) - சுசீலா, முருகம்பாளையம் (மாதர்) - ஈ.அங்குலட்சுமி, இடுவம்பாளையம் (கட்டுமானம்) - செல்வராஜ், இடுவம்பாளையம் (மாதர்) - ராணி, ஆண்டிபாளையம் ஏ - ராஜன், ஆண்டிபாளையம் பி - பரிமளம், குளத்துப்புதூர் - ரவி, சுல்தான்பேட்டை - தங்கவேல், மங்கலம் - குப்புசாமி, சீராணம்பாளையம் - கே.ஈஸ்வரன், பாரதிபுரம் - குமாரவேல், குளத்துப்பாளையம் - சாரதி, இடுவாய் - அ.பழனிசாமி, இடுவம்பாளையம் - பத்மநாபன், வீரபாண்டி - சண்முகம் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
------------------------

0 comments: