Saturday, October 11, 2014

On Saturday, October 11, 2014 by farook press in ,    
தாராபுரம், 
விசாரணைக்காக போலீசாரால் அழைத்து செல்லப்பட்ட கணவர் வீடு திரும்பாததால் பதற்றம் அடைந்த மனைவி தாராபுரம் போலீஸ் நிலையம் வந்து கதறி அழுதார்.
கதவை தட்டினார்கள்
திண்டுக்கல் மாவட்டம் பழனி கீரனூர் அருகே உள்ள பெரிச்சிப்பாளையத்தை சேர்ந்தவர் ரவி (வயது 35). கூலி வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி புஷ்பா (30). நேற்று முன்தினம் வேலைக்கு சென்ற ரவி மாலையில் வீடு திரும்பினார். பின்னர் இரவு தூங்கிக்கொண்டிருந்தார்.அப்போது நள்ளிரவு நேரம் ரவியின் வீட்டின் முன்பு போலீஸ் ஜீப் ஒன்று வந்து நின்றது.
அதில் இருந்து சாதாரண உடையில் வந்தவர்கள் ரவி வீட்டின் கதவை தட்டினார்கள். உடனே கதவை திறந்த புஷ்பா, நீங்கள் யார்? என்றார். அப்போது வந்தவர்கள் “தாங்கள் தாராபுரம் போலீசார் என்றும், ரவியை ஒரு வழக்கு விசாரணைக்காக அழைத்து செல்ல வந்து இருப்பதாகவும், அவர் எங்கே என்று கேட்டுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த புஷ்பா, “தனது கணவர், எந்த பிரச்சினைக்கும் போகக்கூடியவர் அல்ல என்றும், எதுவாக இருந்தாலும் காலையில் போலீஸ் நிலையம் வருவார் என்றும் பதில் கூறினார்.
கண்ணீர்
அதற்குள் வீட்டிற்குள் புகுந்த போலீசார் அங்கு தூங்கிக்கொண்டிருந்த ரவியை எழுப்பி ஜீப்பில் அழைத்து சென்றனர். அதன்பிறகு அவர் எங்கு இருக்கிறார்? என்ன ஆனார் என்ற தகவல் இல்லாததால் அதிர்ச்சி அடைந்த புஷ்பா தாராபுரம் போலீஸ் நிலையம் வந்தார்.
அங்கு பணியில் இருந்த போலீசாரிடம் கதறி அழுது நடந்த விபரத்தை கூறினார். அப்போது போலீசார் “ பெரிச்சிபாளையத்திற்கு தாராபுரம் போலீசார் வரவில்லை என்றும், நாங்கள் அப்படி யாரையாவது விசாரணைக்கு அழைக்க சென்றால் முறைப்படி தகவல் தெரிவிப்போம் என்றும் கூறினார்.
தாராபுரம் போலீசார் தனது கணவரை விசாரணைக்கு அழைத்து செல்லாததால் ரவுடிகள் அழைத்து சென்று இருக்கலாம் என்றும், எனவே தனது கணவரை காப்பாற்ற வேண்டும் என்றும் கூறினார்.
இந்த பிரச்சினை குறித்து தாராபுரம் போலீசார் கூறுகையில் கீரனூர் பெரிச்சிபாளையம் சென்று விசாரணைக்காக யாரையும் அழைத்து செல்லவில்லை என்றும், ரவியை அழைத்து சென்று இருப்பவர்கள் உள்ளுர் போலீசாக இருக்கலாம் என்றும், தெரிவித்தனர்

0 comments: