Saturday, October 11, 2014

On Saturday, October 11, 2014 by farook press in ,    
திருப்பூர் பி.என்.ரோடு லட்சுமிநகர் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன் தனியார் நிதிநிறுவனத்தில் கள்ளச்சாவியை பயன்படுத்தி மர்ம கும்பல் ஒன்று ரூ.81 ஆயிரம் இருந்த பணப்பெட்டியை திருடிச்சென்றது. இதுகுறித்த புகாரின் பேரில் திருப்பூர் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
விசாரணையில், அந்த நிறுவனத்தின் ஊழியர் மாணிக்கம்(வயது 20), முன்னாள் ஊழியர்கள் யுவராஜ்(26), கார்த்திக்குமார்(20) மற்றும் கார்த்திக்குமாரின் நண்பர் வீரமணி(18) ஆகியோர் பணப்பெட்டியை திருடியது தெரியவந்தது. மேலும், அவினாசி அருகே அந்த பணப்பெட்டியை உடைத்து அதில் இருந்த பணத்தை பங்கு போட்டுக்கொண்டதும் தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து போலீசார் 4 வாலிபர்களையும் கைது செய்து அவர்களிடம் இருந்த ரூ.25 ஆயிரம், ஒரு செல்போனை பறிமுதல் செய்தனர். பின்னர் 4 பேரும் திருப்பூர் 1–வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

0 comments: