Friday, October 10, 2014
திருப்பூரில் கள்ளக்காதலனுடன் வீட்டை விட்டு ஓடிய பெண் போலீஸ் ஏட்டை பணியிடை நீக்கம் செய்து திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் எஸ்.என்.சேஷசாய் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:–
திருப்பூர் போலீஸ் லைன் முதல் வீதியில் உள்ள காவலர் குடியிருப்பை சேர்ந்தவர் மனோஜ்குமார்(வயது 40). இவர் திருப்பூரில் சொந்தமாக ‘பாலிபேக்’ நிறுவனம் நடத்தி வருகிறார். இவருடைய மனைவி மணிமாலா(37). இவர் கே.வி.ஆர்.நகரில் உள்ள மத்திய போலீஸ் நிலையத்தில் போலீஸ் ஏட்டாக பணியாற்றி வந்தார். இவர்களுக்கு 11 வயதில் ஒரு மகளும், 9 வயதில் ஒரு மகனும் உள்ளனர்.
போலீஸ் ஏட்டு மணிமாலாவுக்கும், திருப்பூர் ஆலங்காடு பகுதியில் பார் நடத்தி வரும் திருப்பூர் ஜீவாநகரை சேர்ந்த சக்திவேல்(41) என்பவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. சக்திவேலுக்கு ஜெயந்தி என்ற மனைவியும், 21 வயதில் ஒரு மகனும், 13 வயதில் ஒரு மகளும் உள்ளனர்.
கடந்த மாதம் 11–ந்தேதி காலை மணிமாலா, தனது மொபட், செல்போன்கள் ஆகியவற்றை வீட்டிலேயே வைத்து விட்டு நகை மற்றும் துணிகளை எடுத்துக்கொண்டு, கள்ளக்காதலன் சக்திவேலுடன் வீட்டை விட்டு ஓடியதாக கூறப்படுகிறது. சக்திவேலும் தனது ஸ்கூட்டர், கார், மற்றும் செல்போன்களை வீட்டிலேயே விட்டுவிட்டு மணிமாலாவுடன் சென்றதாக தெரிகிறது.
இதுகுறித்து மணிமாலாவின் கணவர் மனோஜ்குமார், கள்ளக்காதலனுடன் ஓடிய தனது மனைவியை கண்டுபிடித்து தரும்படி திருப்பூர் வடக்கு போலீஸ் நிலையத்திலும், சக்திவேலின் மனைவி ஜெயந்தி, தனது கணவரை கண்டு பிடித்து தரும்படி திருப்பூர் மத்திய போலீஸ் நிலையத்திலும் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இருவரையும் வலை வீசி தேடி வருகிறார்கள்.
இதற்கிடையே பெண் போலீஸ் ஏட்டு மணிமாலா காவல்துறைக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டதாக கூறி மணிமாலாவை பணியிடை நீக்கம் செய்து மாநகர போலீஸ் கமிஷனர் எஸ்.என்.சேஷசாய் உத்தரவிட்டுள்ளார். இதற்கான உத்தரவு நகலை மணிமாலாவின் கணவர் மனோஜ்குமாரிடம் மாநகர போலீசார் முறைப்படி கொடுத்து கையெழுத்து வாங்கினார்கள்.
இந்த நிலையில் கள்ளக்காதலனுடன் ஓடிய மணிமாலா போலீஸ் ஏட்டாக பணியாற்றிய அனுபவத்தால், போலீசார் எந்த வழியில் எல்லாம் காணாமல் போன நபரையோ, குற்றவாளியையோ கண்டு பிடிப்பார்கள் என்று நன்கு தெரிந்து கொண்டிருந்தார். இதனால் தங்கள் இருப்பிடத்தை போலீசார் கண்டுபிடித்து விடக்கூடாது என்று, இருவரும் தங்கள் செல்போன்கள் மற்றும் வாகனங்களை வீட்டிலேயே விட்டுவிட்டு சென்றதால், போலீசாருக்கு துப்பு கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது.
இதன்காரணமாக போலீசார் இருவரின் வங்கி கணக்குகளையும் கண்காணித்து வந்தனர். இதன்மூலம் போலீஸ் ஏட்டு மணிமாலா, தனது கள்ளக்காதலனுடன் டெல்லியில் தங்கி இருப்பது தெரியவந்துள்ளது. இதைத்தொடர்ந்து திருப்பூர் போலீசார் டெல்லி சென்று வீட்டை விட்டு ஓடிச்சென்ற இருவரையும் மீட்க முடிவு செய்து இருப்பதாக தெரிகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருப்பூர் மாநகராட்சி 2–வது மண்டலத்துக்கு உட்பட்ட 16–வது வார்டு முதல் 30–வது வார்டு வரை உள்ள 15 வார்டுகளில் நடந்து வரும் வளர்ச்சி பணிகள் ...
-
திருப்பூர் பலவஞ்சிபாளையம் பகுதியை சேர்ந்தவர் குமார் (வயது 36). இவருடைய மனைவி தமிழரசி. இவர்கள் 2 பேரும் அதே பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தி...
-
திருச்சி அயன் ஸ்டீல் மெர்ச்சென்ட்ஸ் அசோசியேசன் சார்பாக கடலூர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 10 லட்சம் மதிப்புள்ள அத...
-
திருச்சி திருச்சியில் 10315,10409 நம்பர்கள் உடைய மதுபான கடையை திறக்க கூடாது என வலியுறுத்தி நூற்றுக்கு மேற்பட்ட பெண்கள் கூறுகைய...
-
சேலம் அருகே ஓடும் ரெயிலில் கல்லூரி மாணவி சில்மிஷம் செய்யப்பட்டது தொடர்பாக ராணுவ வீரர் கைது செய்யப்பட்டார். கல்லூரி மாணவி கர்நாடக மாநிலம...
-
நங்கவரம் பண்ணை சார்பாக கலவை உரக்கிடங்கிற்கு 1 ஏக்கர் நிலம் நன்கொடை ...
-
எல்பின் நிறுவனம் குறித்து சிவகங்கை SP யிடம் புகார் . எல்பின் நிறுவனம் தற்போது காரைக்குடியில் கூட்டம் நடத்தப் போவதாக தகவல் வந்துள்ளது...
0 comments:
Post a Comment