Thursday, November 27, 2014

On Thursday, November 27, 2014 by farook press in ,    
உரம் விற்பனை தொடர்பாக விவசாயிகள் பல புகார்களை தெரிவித்து வந்தனர். இதைத்தொடர்ந்து கலெக்டர் ஜி.கோவிந்தராஜ் உத்தரவின் பேரில் திருப்பூர் வேளாண்மை இணை இயக்குனர் பி.சந்தானகிருஷ்ணன் ஆலோசனைப்படி துணை இயக்குனர் ஏ.மகேந்திரன் (திருப்பூர்), உதவி இயக்குனர்கள் ஞானசேகரன் (மூலனூர்), செல்வராஜன் (திருப்பூர்),ஆர்.சிவக்குமார் (அவினாசி), உடுமலை வோளண்மை அலுவலர் ச.நாகராஜன் ஆகியோர் கொண்ட சிறப்பு அதிகாரிகள் குழுவினர் உடுமலையில் உள்ள உரக்கடைகளில் நேற்று திடீர் ஆய்வு செய்தனர்.
இந்த ஆய்வின் போது 5 மொத்த உர விற்பனை நிலையங்களில் உர உரிமம், உரம் இருப்பு, விற்பனை விபரம் குறித்து ஆய்வு செய்யப்பட்டதில் உரம் விற்பனையில் குறைபாடுகள் கண்டறியப்பட்டது. இதையொட்டி 5 மொத்த உர விற்பனை நிலையங்களில் 687டன் உரங் களை விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டது. இதன் மதிப்பு சுமார் ரூ.1கோடியாகும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து உர கட்டுப்பாடு சட்டம் 1985–ன் படி உரச்சட்டத்திற்கு உட்பட்டு உரம் விற்கவும், விற்பனை செய்யப்பட்ட உரங்களுக்கு விவசாயிகளிடம் கையொப்பம் பெற்றும், இருப்பு பதிவேட்டில் விற்பனை விபரம் குறித்து அவ்வப்போது பதிவு செய்து மீதி இருப்பை குறிப்பிட்டுவைக்கவும் உர விற்பனையாளர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது.
மேலும் உரம் பதுக்குவது மற்றும் அளவுக்கு அதிகமாக உரம் இருப்பு வைத்து விற்பனை செய்வது குறித்து புகார் வந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகளால் உர விற்பனையாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. விவசாயிகள் உரம் வாங்கும் போது உரிய ரசீது கேட்டு பெற்று கொள்ள வேண்டும் என்று வேளாண்மை இணை இயக்குனர் விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

0 comments: