Wednesday, November 26, 2014

On Wednesday, November 26, 2014 by farook press in ,    
தலைமுறை தலைமுறைக்கு பெயர் சொல்லும் திட்டங்களை ஜெயலலிதா அறிவித்து செயல்படுத்தி வருகிறார் என பொங்கலூர்,அவினாசியில் 583 பெண்களுக்கு ரூ. 2.87 கோடிமதிப்புள்ள திருமண உதவி தொகை மற்றும் தாலிக்கு தங்கம் வழங்கும் விழாவில் அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் பேசினார்.
திருப்பூர் மாவட்ட சமூக நலத்துறையின் சார்பில், ஏழை பெண்கள் திருமண நிதி உதவியுடன், திருமாங்கல்யத்துக்கு 4 கிராம் தங்கம் வழங்கும் திட்டத்தின் கீழ் 583 பயனாளிகளுக்கு ரூ.2 கோடியே, 87 லட்சத்து, 48 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா பல்லடம் தொகுதி பொங்கலூர் லட்சுமி திருமண   மண்டபத்திலும், அவினாசி தொகுதி ஸ்ரீ கருணாம்பிகா திருமண மண்டபத்திலும் நடைபெற்றது.விழாவிற்கு மாவட்ட கலெக்டர் ஜி.கோவிந்தராஜ் தலைமை தாங்கினார். மேயர் அ.விசாலாட்சி, எம்.எல்.ஏ.க்கள் பல்லடம் கே.பி பரமசிவம், அவிநாசி கருப்பசாமி ஆகியோர் முன்னிலை வகித்து பேசினார். மாவட்ட சமூக நல அலுவலர் ஜெயந்தி வரவேறு பேசினார்.விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் பேசியதாவது:-
தமிழ்நாடு இந்தியாவில் முதன்மை மாநிலமாக திகழ வேண்டும் என்பதற்காக இந்த 3 ஆண்டுகால ஆட்சியில் பல்வேறு திட்டங்கள் மூலம் தமிழகத்தில் உள்ள 7 1/2 கோடி மக்களும் பயன்பெறும் வகையில் முதலமைச்சரால் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டு சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. தேர்தலின் போது அறிவிக்கப்பட்ட 54 திட்டங்களையும் முதல்வராக பதவி ஏற்ற 2 1/2 ஆண்டுகளில் முழுமையாக நிறைவேற்றியவர் ஜெயலலிதா.அவர் அறிவித்த திட்டங்களில் பொதுமக்கள் ஒவ்வொரு திட்டத்தின் மூலமும் பயன் அடைந்து வருகின்றனர். அடித்தட்டு மக்களின் வாழ்க்கை தரம் உயர வேண்டும் என்கிற  அடிப்படையில் பல்வேறு திட்டங்களை ஜெயலலிதா செயல்படுத்த்தினார். அந்த வகையிலே இன்று அவரது வழிகாட்டுதல் படி இன்று தமிழக அரசு சீரிய முறையில் செயல்படுத்தி வருகிறது. 
அந்தவகையில் ஏழை எளிய குடும்ப பெண்களுக்காக, இந்தியாவிலேயே எங்கும் இல்லாத வகையில் திருமண உதவி தொகை வழங்கப்படுகிறது. பட்டப்படிப்பு படித்த பெண்களுக்கு 4 கிராம் தங்கமும் ரூ. 50 ஆயிரம் பணமும் வழங்கப்படுகிறது, +2 முடித்த பெண்களுக்கு 4 கிராம் தங்கமும் ரூ.25 ஆயிரமும் வழங்கப்படுகிறது. 3 1/2 ஆண்டில் திருப்பூர் மாவட்டத்தில் 10 ஆயிரத்து 929 பயனாளிகளுக்கு ரூ.51.46 கோடி மதிப்பிலான திருமண உதவி மற்றும் 4 கிராம் தங்கம் வழங்கப்பட்டுள்ளது.ஒரு பெண்ணுக்கு திருமணம் எப்படி நடந்தது என்று அந்த பெண்ணின் பேரன் கேட்டால் கூட மக்கள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சியில் அவர் அறிவித்த அற்புத திட்டத்தில்தான் திருமணம் நடந்தது என்று சொல்ல கூடிய வகையில் தலைமுறை, தலைமுறைக்கு பேசும் சாதனை திட்டங்களை வழங்கி வருகிறார். அவருக்கு நீங்கள் என்றென்றும் உறுதுணையாக,விசுவாசமாக இருக்க வேண்டும். 
இவ்வாறு அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் பேசினார் 
மாவட்ட கலெக்டர் ஜி.கோவிந்தராஜ் தலைமை தாங்கி பேசும்போது, தமழக அரசு பல்வேறு அற்புதமான திட்டங்களை குறிப்பாக கறவை  மாடுகள,ஆடுகள் வழங்கும் திட்டம், மருத்துவ காப்பீட்டு திட்டம், கர்ப்பிணி தாய்மார்களுக்கு மகப்பேறு நிதி உதவி வழங்கும் திட்டம், அம்மா திட்டம், அம்மா உணவகம், உணவுக்கு உத்திரவாதம் அளிக்கும் வகையில் விலையில்லா 20 கிலோ அரிசி வழங்கும் திட்டம் உள்ளிட்ட முத்தான திட்டங்களை வழங்கி வருகிறது.அதில் முத்தாய்பான திட்டன் தான் ஏழை பெண்களுக்கு திருமண நிதி உதவி மற்றும் திருமாங்களியத்திற்கு 4 கிராம் தங்கம் வழங்கும் திட்டமாகும். எனவே, பொது மக்கள் இது போன்ற திட்டங்கள் மூலம் பயன் பெற வேண்டும் என கூறினார்.
மேயர் அ.விசாலாட்சி முன்னிலை வகித்து பேசும்போது, தமிழக முதல்வராக ஜெயலலிதா பொறுப்பேற்ற பின்னர் வாக்களித்த மக்களுக்கு வாக்குறுதி கொடுத்த திட்டங்களை கூர்ந்து கவனித்து, அந்த திட்டங்களை எங்களை போன்ற மக்கள் பிரதிநிதிகள் மூலம் வாங்கும் வகையில் வழி வகை செய்துள்ளார். திருப்பதி கோவிலுக்கு கூட தங்கம் தட்டுபாடு வந்ததாக பேசப்படுகிறது. ஆனால் சாதாரண ஏழைப்பெண்ணுக்கு தஹ்ங்கம் இல்லாமல் திருமணம் தடைபடகூடது என்கிற தொலை நோக்கு பார்வையுடன் திருமண நிதிஉதவியுடன் தாலிக்கு 4 கிராம் தங்கமும் ஜெயலலிதா வழங்குகிறார்.. 
எனவே, மக்கள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு தொடர்ந்து ஆதரவு அளிக்க வேண்டும் என பேசினார்.
இந்த விழாவில், மாவட்ட ஊராட்சி தலைவர் எம்.சண்முகம், துணைத் தலைவர்  ஆனந்தகுமார், ஊராட்சி ஒன்றியகுழு தலைவர்கள் சிவச்சலம் (பொங்கலூர்) எம்.கே.ஆறுமுகம் (பல்லடம்), பத்மா நந்தினி (அவினாசி), ஊராட்சி மன்ற தலைவர்கள் கரைபுதூர் நடராஜ்,யு.எஸ்.பழனிசாமி .மாவட்ட கவுன்சிலர்கள் ப.நடராஜன்,பழனிசாமி, மாநகராட்சி மண்டல தலைவர்கள்  ராதாகிருஷ்ணன் கிருத்திகா  சோமசுந்தரம், பல்லடம் வைஸ் பழனிசாமி, அண்ணா தி.மு.க.நிர்வாகிகள் கே.என்.சுப்பிரமணியம், எம்.மணி, மு.சுப்பிரமணியம், சேயூர் வேலுசாமி,  ராமசாமி,ஜெக தீசன், பேரூராட்சி தலைவர் ஜெகதம்பாள், பூண்டி முன்னாள் தலைவர் லதாசேகர், கோகுல் ராஜ்குமார், அர்ஜுனன் மற்றும் தாசில்தார்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், மற்றும் உள்ளாட்சி மன்ற, கூட்டுறவு சங்க பிரதி நிதிகள், அரசு அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.  


0 comments: