Sunday, November 02, 2014

On Sunday, November 02, 2014 by farook press in ,    
ஊத்துக்குளியில் எஸ்.மாருசாமி, வி.ஆர்.பழனிசாமி நினைவரங்கில் ஞாயிறன்று மார்க்சிஸ்ட் கட்சியின் ஊத்துக்குளி ஒன்றிய மாநாடு நடைபெற்றது. ஆர்.அன்பழகன், கே.சரஸ்வதி மற்றும் கண்ணையன் ஆகியோர் தலைமைக்குழுவாகச் செயல்பட்டனர். மூத்த தோழர் செ.நடேசன் செங்கொடியை ஏற்றி வைத்தார். வி.கே.பழனிசாமி அஞ்சலி தீர்மானத்தை முன்மொழிந்தார். ஆர்.மணியன் வரவேற்றார். இதைத் தொடர்ந்து கட்சியின் திருப்பூர் மாவட்டச் செயலாளர் கே.காமராஜ் மாநாட்டைத் தொடக்கி வைத்து உரை ஆற்றினார். ஒன்றியக்குழுச் செயலாளர் ஆர்.குமார் வேலையறிக்கை சமர்ப்பித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி.மூர்த்தி வாழ்த்திப் பேசினார்.
இம்மாநாட்டில் அவிநாசி அத்திக்கடவு திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும், ஊத்துக்குளியில் 108 ஆம்புலன்ஸ் 24 மணி நேரம் நிறுத்தி வைத்திருக்க ஏற்பாடு செய்ய வேண்டும், செங்கப்பள்ளி கூட்டுறவு சங்க நகை கடன் மோசடியில் பாதிக்கப்பட்ட உறுப்பினர்களுக்கு உடனடியாக நகைகளை மீட்டுக் கொடுக்க வேண்டும், பல்லகவுண்டம்பாளையத்தில் நால்வழி நெடுஞ்சாலை பகுதியில் மேம்பாலம் அமைக்க வேண்டும், பாப்பம்பாளையம் துணை சுகாதார நிலையத்தில் செவிலியர் நியமிக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இம்மாநாட்டில் ஊத்துக்குளி ஒன்றியத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
மார்க்சிஸ்ட் கட்சியன் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.உண்ணிகிருஷ்ணன் மாநாட்டு நிறைவுரை ஆற்றினார். முடிவில் கே.பெரியசாமி நன்றி கூறினார்.


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஊத்துக்குளி ஒன்றிய நான்காவது மாநாட்டை ஞாயிறன்று தொடங்கி வைத்து பேசுகிறார் கட்சியின் திருப்பூர் மாவட்டச் செயலாளர் கே.காமராஜ். உடன் ஒன்றியக்குழுச் செயலாளர் ஆர்.குமார், மாநாட்டு தலைமைக்குழு உறுப்பினர்கள் ஆர்.அன்பழகன், கே.சரஸ்வதி, கண்ணையன் உள்ளிட்டோர்     மாநாட்டில் பங்கேற்ற பிரதிநிதிகளில் ஒரு பகுதியினர்

0 comments: