Tuesday, November 11, 2014

On Tuesday, November 11, 2014 by farook press in ,    
தமிழக அரசின் சுகாதார துறை மற்றும் திருப்பூர் வடக்கு ரோட்டரி சங்கம் சார்பில், திருப்பூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் காச நோயாளிகளுக்கு ஊட்டச்சத்து உணவு வழங்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு  மாவட்ட கலெக்டர் ஜி.கோவிந்தராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட ஊராட்சி தலைவர் வி.எம்.சண்முகம், திருப்பூர் துணை மேயர் சு.குணசேகரன், ரோட்டரி சங்க தலைவர் ரத்தினசாமி ஆகியோர்  முன்னிலை வகித்தனர்.விழாவில் வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு காச நோயாளிகளுக்கு ஊட்டச்சத்துணவு வழங்கி பேசியதாவது:-
வடக்கு ரோட்டரி சங்கத்தின் சார்பில் காச நோயாளிகளுக்கு ஊட்டச்சத்துணவு வழங்கும் திட்டத்தை திருப்பூரில்  வைத்திருக்கிறார்கள். இது ஒரு முன் மாதிரியான திட்டமாகும். இந்த திட்டம் விரைவில் தமிழகம் முழுவதும்  துவக்கப்படும்.மக்கள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் தன்னுடைய ஆட்சிக்காலத்தில்தான், தமிழக மக்கள் சுகாதாரமாக வாழ வேண்டும் என்பதற்காக சுகாதார திட்டங்களுக்காக ரூ.8 ஆயிரம் கோடி  நிதி ஒதுக்கி, அரசு மருத்துவமனைகளிலே அனைத்து சிகிச்சைகளும் கிடைக்க வழிவகை செய்துள்ளார்.காச நோய் தொற்று நோய் அல்ல.உரிய சிகிச்சைகளை மேற்கொண்டால் அந்த நோய் குணமாகும். 
நோயாளிகள் நல்ல சத்துணவு சாப்பிட வேண்டும்,பாதுகாப்பாக  இருக்க வேண்டும் என்பதற்காக தான் இன்றைக்கு இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. தமிழகம் முழுவதும் சுகாதரத்துக்காக பல்வேறு மாத்திரைகள் வழங்கப்படுகிறது. இதனுடன் ஒரு வருடம் தொடர்ச்சியாக ஊட்டச்சத்து உணவு வழங்கப்படுகிறது. நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த திட்டத்தை நல்ல முறையில் பயன்படுத்தி கொள்ள வேண்டும். அரசின் மூலமாக இந்த நோயால் பாதிக்கப்பட்ட 400 பேர்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படுகிறது.மேலும் சுகாதார நடவடிக்கைகள் செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில்,இணை இயக்குனர் டாக்டர்.கேசவன், துணை இயக்குனர் டாக்டர்.ரகுபதி, மருத்துவ அறிவியல் துறை துணை இயக்குனர் பொன்னுசாமி, மாநகராட்சி மண்டல தலைவர்கள் ஜெ.ஆர்.ஜான், வி.ராதாகிருஷ்ணன், கிருத்திகா  சோமசுந்தரம், நிலைக்குழு தலைவர் அன்பகம் திருப்பதி, பூலுவபட்டி பாலு, ரோட்டரி நிர்வாகிகள் சிறீதரன், முத்துசாமி, மாமன்ற உறுப்பினர்கள் கவுன்சிலர்கள் கே.செல்வம், எம்.கண்ணப்பன், சண்முகசுந்தரம் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், கூட்டுறவு சங்க நிர்வாகிகள், மருத்துவத்துறை அலுவலர்கள், பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.தமிழக அரசின் சுகாதார துறை மற்றும் திருப்பூர் வடக்கு ரோட்டரி சங்கம் சார்பில், திருப்பூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் காச நோயாளிகளுக்கு ஊட்டச்சத்து உணவு வழங்கும் விழாவில் வனத்துறை .எம்.எஸ்.எம்.ஆனந்தன் காச நோயாளிகளுக்கு ஊட்டச்சத்துணவு வழங்கினார்.அருகில் கலெக்டர் ஜி.கோவிந்தராஜ், மாவட்ட ஊராட்சி தலைவர் எம்.சண்முகம், துணை மேயர் சு.குணசேகரன், மண்டல தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள், ரோட்டரி சங்க நிர்வாகிகள் ஆகியோர் உள்ளனர்.
 

0 comments: