Wednesday, November 26, 2014

On Wednesday, November 26, 2014 by farook press in ,    
திருப்பூர் பெருமாள் கோவிலில் வருகிற 1-ந்தேதி நடைபெறும் கும்பாபிஷேகம் விழாவினை யொட்டி மாநகராட்சி சார்பில் ரூ.35 லட்சம் மதிப்பில் நடைபெறும் புனரமைப்பு மற்றும் தூய்மைபடுத்தும் பணியினை மேயர் விசாலாட்சி பார்வையிட்டார்.
திருப்பூர் பெருமாள் கோவில் திருக்குட நன்னீராட்டுப் (கும்பாபிஷேக) பெருவிழா நடைபெறுகிறது. விழா தரிசனத்துக்காக பல்லாயிரக்காணக்கான மக்கள் இப்பகுதிக்கு வருகை தருகின்றனர். இங்குள்ள சாலைகளில்  ரூ.35 லட்சம் மதிப்பில் சாக்கடை கால்வாய், மழைநீர் வடிகால், தெரு விளக்கு, பேவர் பிளாக் கற்கள் பாதிக்கும் பணிகள்  என மாநகாட்சி சார்பில் நடைபெறுகிறது.பொதுமக்கள் மற்றும் பக்கதர்களின் வசதிக்காகவும், கோவில் விழா சிறப்பாக நடைபெறவும் மாநகராட்சி பணியாளர்களை துரிதமாக பணிகளை செய்து முடிக்க உத்த்ரவிடப்படுள்ளது. மேலும் கும்பாபிஷேக விழா நாளில் இப்பகுதியில் 4 இடங்களில் குடிநீர் தொட்டி, 4 இடங்களில் தற்காலிக கழிப்பிடம் அமைக்கப்பட உள்ளது. இத்துடன் பூ மார்க்கெட் மற்றும் அருகில் உள்ள  வீதி பகுதிகளில் உடனுக்குடன் குப்பைகளை அகற்றவும், சுகாதாரம் பேணவும் 100க்கும் மேற்பட்ட மாநகராட்சி பணியாளர்கள் தூய்மை பணியில் ஈடுபடுவார்கள். கும்பாபிஷேக நாளில் மக்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து தர மாநகராட்சி நிர்வாகம் முழு வீச்சில் செயல்படும்.இவ்வாறு மேயர் விசாலாட்சி கூறினார். 
இந்த ஆய்வின்போது ராஜ்குமார், முத்துக்குட்டி, பிரகாஷ், சரவணன்,உடன் 3-ம் மண்டல உதவி ஆணையாளர் கண்ணன், உதவி செயற்பொறியாளர் திருநாவுக்கரசு, சுகாதார மேற்பார்வையாளர் பிச்சை, ஒப்பந்ததாரர் மந்திராச்சலம் ஆகியோர் உடன் இருந்தனர்

0 comments: