Thursday, November 20, 2014
திருப்பூரில் நீர்நிலைகளைச் சுற்றியிருக்கும் தனியார் தொழிற்சாலைகள் ஆக்கிரமித்துள்ள நிலங்களை மீட்பதுடன், ஆற்றோரம் குடியிருக்கும் மக்களுக்கு மாற்று குடியிருப்பு ஏற்பாடு செய்துதர வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் தெற்கு மாநகர மாநாடு வலியுறுத்தியுள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் தெற்கு மாநகர 21வது மாநாடு ஞாயிறு, திங்கள் இரு நாட்கள் செங்குந்தபுரம் தோழர் என்.ஆறுமுகம் நினைவரங்கில் (ராஜகணபதி மண்டபம்) நடைபெற்றது.
மாநகரக்குழு உறுப்பினர் எஸ்.விஜயா செங்கொடியை ஏற்றி வைத்தார். பி.பாலன் அஞ்சலி தீர்மானம் முன்மொழிந்தார். ஜி.ஈஸ்வரமூர்த்தி வரவேற்றார்.
மாவட்ட செயற்குழு உறுப்பினர் செ.முத்துக்கண்ணன் மாநாட்டைத் தொடக்கி வைத்து உரையாற்றினார். மாநகரச் செயலாளர் எம்.ராஜகோபால் முன்வைத்த அறிக்கை மீது விவாதம் நடைபெற்றது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி.சுப்பிரமணியம் வாழ்த்திப் பேசினார்.
தீர்மானங்கள்
இம்மாநாட்டில் ஆற்றோரங்களில் குடியிருக்கும் மக்களுக்கு மாற்று குடியிருப்பு ஏற்பாடு செய்யமல் அவர்களை அங்கிருந்து அகற்றக் கூடாது, ஜம்மனை மற்றும் வெள்ளியங்காடு பாலங்களை உயர்த்திக் கட்ட வேண்டும், முத்தையன் நகர், ஜம்மனை, சத்யாநகர் பகுதிகளில் ஓடை ஓரங்களில் தடுப்புச் சுவர் கட்டி பாதுகாப்பு வழங்க வேண்டும், குடிமனை பட்டா, அடுக்கு மாடி குடியிருப்பு கட்டித்தர வேண்டும்.
திருப்பூரில் அரசு மருத்துவக் கல்லூரி, பொறியியல் கல்லூரி தொடங்குவதுடன், சிறப்பு நிதி ஒதுக்கி எல்ஆர்ஜி கல்லூரியை மேம்படுத்த வேண்டும், டவுன்ஹால் அரங்கை வியாபார நோக்கில் பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது, திருட்டு, வழிப்பறி, சமூக விரோத செயல்களை நகரில் கட்டுப்படுத்த வேண்டும், பெண்களுக்கு தனிப் பேருந்துகள் இயக்க வேண்டும், செல்லாண்டியம்மன் துறை அரசு குடிசைமாற்று வாரிய குடியிருப்புகளில் சுகாதார வசதிகளை மேம்படுத்த வேண்டும் உள்பட 21 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாநகரக்குழு
இம்மாநாட்டில் எம்.ராஜகோபால் மாநகரக்குழுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். இவருடன் எஸ்.சுந்தரம், டி.ஜெயபால், பி.பாலன், ஆறுக்குட்டி, கே.பொம்முதுரை, ஏ.சுப்பிரமணியம், ஜி.மூர்த்தி, ஏ.முருகசாமி, ஏ.ஷகிலா, ஜி.செந்தில்குமார், எஸ்.ராமகிருஷ்ணன், எஸ்.பானுமதி, டி.நவீன் லட்சுமணன் ஆகிய 14 பேர் மாநகரக்குழு உறுப்பினர்களாகத் தேர்வு செய்யப்பட்டனர்.
மாவட்ட மாநாடு பிரதிநிதிகளாக 3 பெண்கள் உள்பட 21 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.
கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கே.தங்கவேல் எம்.எல்.ஏ., மாநாட்டை நிறைவு செய்து வைத்து உரையாற்றினார். முடிவில் சி.முருகேஷ் நன்றி கூறினார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
குளித்தலை -மணப்பாறை சாலையில் இரட்டை வாய்க்கால் பாலம் சீரமைப்பு பொதுமக்கள் பாராட்டு குளித...
-
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
-
திருச்சி மாநகராட்சியில் துணை மேயர் மீது 44 வா ர்டு மாமன்ற உறுப்பினர் பகிரங்க குற்றச்சாட்டு திருச்சி மாநகராட்சி கூட்டம் இன்...
-
அமராவதி அணையில் நீர் இருப்பு குறுவை சாகுபடி பணி மும்முரம் கரூர் அமராவதி அணை நீரை நம்பி விவசாயிகள் நெல், கரும்பு ...
-
திருச்சி 9.5.16 சபரிநாதன் 9443086297 திருச...
-
மதுரை மாநகர், புறநகர், வடக்கு, தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் செயல் வீரர்கள் கூட்டம் காமராஜர் சாலையில் உள்ள தமிழ்நாடு தொழில் வர்த்தக ...
-
அங்கீகாரம் இல்லாத மருத்துவ படிப்பு சுகாதாரத்துறை அமைச்சருக்கு நடவடிக்கை எடுக்க கோரிக்கை, உடனடி நடவடிக்கை எடுக்கப்படுமா? சமூக ஆர்வலர்கள் எத...
-
திருப்பூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்காக திருப்பூர் பிக்-பஜார் சார்பில் ரத்ததான முகாம் எம்.ஜி.பி.பஸ் நிறுத்தம் அருகில் உள்ள ப...
-
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் 13வது மாநில மாநாட்டை முன்னிட்டு கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்கும் கட்டுரை, கவிதை போட...
0 comments:
Post a Comment