Sunday, November 09, 2014

On Sunday, November 09, 2014 by farook press in ,    
சத்துணவு ஊழியர்களின் நிலுவைக் கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூர் மாவட்டத்தில் அனைத்து ஒன்றியங்களிலும் நவம்பர் 17 முதல் 28 ம் தேதி வரை ஆர்ப்பாட்டங்கள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் திருப்பூர் இரண்டாவது மாவட்ட பேரவை சனியன்று கே.ஆர்.சி. சிட்டி சென்டரில் மாவட்டத் தலைவர் எஸ்.முருகேசன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட இணைச் செயலாளர் எஸ்.சுசீலா வரவேற்றார். 
மாநிலச் செயலாளர் பி.பேயத்தேவன் பேரவையைத் தொடக்கி வைத்துப் பேசினார். மாவட்டச் செயலாளர் கே.பால்ராஜ் அறிக்கை சமர்ப்பித்தார். மாவட்டப் பொருளாளர் கே.முத்தமிழ்ராஜ் வரவு செலவு அறிக்கையை முன்வைத்தார். அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் ஏ.அம்சராஜ் வாழ்த்திப் பேசினார்.
இதில் சத்துணவு ஊழியர்களுக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம், சட்டரீதியான குடும்ப பென்சன், மாநகராட்சியில் காலியாக உள்ள ஆறு பணியிடங்களை நிரப்புவது, ஓய்வு பெற்றோர் பணப்பலன்களை உடனடியாக வழங்குவது, 13 வகை உணவுக்கு முன் மானியம் வழங்க வேண்டும், மாறுதல் கோரும் அனைத்து ஊழியர்களுக்கும் மாறுதல் வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்டம் முழுவதும் ஒன்றியஅளவில் ஆர்ப்பாட்டங்கள் நடத்த முடிவு செய்யப்பட்டது. இந்த மாநாட்டை நிறைவு செய்து வைத்து மாநிலத் தலைவர் கே.பழனிசாமி உரையாற்றினார். நிறைவாக மாவட்ட இணைச் செயலாளர் ஆர்.ராமசாமி நன்றி கூறினார்.

0 comments: