Saturday, November 01, 2014

On Saturday, November 01, 2014 by Unknown   
மதுரை ஆவின் நிறுவனத்தின் உயர்த்தப்பட்ட பால் விற்பனை விலை அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய விலை சனிக்கிழமை (நவ.1) முதல் அமலுக்கு வருகிறது.
இதுதொடர்பாக மதுரை ஆவின் பொது மேலாளர் வெளியிட்டுள்ள செய்தி:
மதுரை மாவட்டத்தில் நாளொன்றுக்கு 1 லட்சத்து 60 ஆயிரம் லிட்டர் ஆவின் பால் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பால் உற்பத்திச் செலவு அதிகரித்த காரணத்தால், கொள்முதல் விலையை நவ.1 ஆம் தேதி முதல் லிட்டருக்கு ரூ.5-ம், தேனி மற்றும் மதுரை மாவட்ட பால் உற்பத்தியாளர்களுக்கு கூடுதல் சிறப்பு சலுகையாக லிட்டருக்கு 85 காசுகளும் உயர்த்தி வழங்கப்படுகிறது. கால்நடைத் தீவனத்துக்கு கிலோவுக்கு ரூ.4-ம் மானியம் வழங்கப்படுகிறது.
 ஆவின் பால் விற்பனை விலையில் 80 சதவீதம் உற்பத்தியாளர்களுக்குச் செல்லும் வகையில், அரசு அறிவித்துள்ள விலை மாற்றத்தின் அடிப்படையில் மதுரை ஆவின் நிறுவனத்தின் பால் விற்பனை விலை மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
இந்த விலை மாற்றத்தின் அடிப்படையில் தரமான ஆவின் பால் பாக்கெட்டுகளை ஆவின் டெப்போக்கள் மற்றும் சில்லரை விற்பனை மையங்களில் பொதுமக்கள் வாங்கி பயன் பெறலாம்.
 மாதாந்திர பால் அட்டைதாரர்கள் நவ.1 முதல் நவ.15 ஆம் தேதிக்குரிய கூடுதல் தொகையை, பால் அட்டை ஒன்றுக்கு ரூ.75 வீதம், டெப்போ முகவர்கள் மூலம் நவ.8 ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 comments: