Saturday, November 01, 2014

On Saturday, November 01, 2014 by Unknown in ,    
வணிக வரி வசூலைப் பெருக்கி இலக்கை அடைய தீவிர நடவடிக்கை மேற்கொள்ளுமாறு வணிக வரி அலுவலர்களுக்கு அத் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் அறிவுரை வழங்கினார்.
 வணிக வரித் துறையின் மதுரை கோட்ட அலுவலர்களுடனான கலந்தாய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. வணிகவரித் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் தலைமை வகித்தார். வணிக வரித் துறைச் செயலர் எஸ்.கே.பிரபாகரன், ஆணையர் கே.ராஜாராம், கூடுதல் ஆணையர் ரத்தினசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
  மதுரை கோட்ட இணை ஆணையர் எஸ்.விஜயகுமார், துணை ஆணையர்கள், மதுரை கோட்டத்துக்கு உட்பட்ட மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களைச் சேர்ந்த வணிக வரி அலுவலர்கள் பங்கேற்றனர்.
  வணிக வரி துறையின் முன்னேற்ற நடவடிக்கைகள், வரி வசூலைத் தீவிரப்படுத்த மேற்கொள்ள வேண்டிய பணிகள், கணினி வழியிலான சேவைகளை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வணிகர்களை அறிவுறுத்துவது என்பன உள்ளிட்டவை குறித்து இக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
 தமிழகம் முழுவதும் நடப்பு ஆண்டுக்கான வணிக வரி வசூல் இலக்காக ரூ.68 ஆயிரம் கோடி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  இதில் இப்போது வரை ஏறத்தாழ 50 சதவீதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
 வரும் மாதங்களில் எஞ்சிய தொகையை வசூல் செய்து இலக்கை அடைய அறிவுறுத்தப்பட்டது.

0 comments: