Sunday, November 23, 2014
திருப்பூர் மாநகர காவல்துறை ஆணையாளர் அலுவலகத்தி ல்"பாதுகாப்பான திருப்பூர்' என்ற திட்டத்தின் கீழ் போலீசாருக்கு மக்கள் தகவல் தெரிவிப்பதற்கான இலவச எஸ்.எம்.எஸ். சேவை (குறுஞ்செய்தி தகவல் மையம்) திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க வெள்ளி விழா ஆண்டினை முன்னிட்டு அச்சங்கத்துடன் இணைந்து மக்கள் தகவல் தெரிவிப்பதற்கான குறுஞ்செய்தி தகவல் மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் துவக்க விழா ஆணையாளர் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் ஜி.கோவிந்தராஜ் தலைமை தாங்கி பேசினார்.திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத்தலைவர் ஏ.சக்திவேல் முன்னிலை வகித்து பேசினார். மாநகர துணை ஆணையாளர் திருநாவுக்கரசு வரவேற்று பேசினார். குறுஞ்செய்தி அனுப்பும் தகவல் மையத்தை வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் உதுவக்கி வைத்து பேசியதாவது:-
ஒரு நாடு நல்லமுறையில் செயல்பட வேண்டும் என்றால் அந்த நாட்டில் சட்டம் ஒழுங்கு சரியாக இருக்க வேண்டும். அந்த வகையில் மிக பெரிய தொழில் நகரமாக பல்வேறு மாநில மக்கள் தொழில் செய்யும் நகரமாக விளங்கும் திருப்பூரில் சட்டம் ஒழுங்கு பிரச்சனைக்கு சவால் விடும் நகரமாக இருந்தது. ஆனால் திருப்பூரில் கடந்த 3 ஆண்டுகாலமாக இவை கட்டுபாட்டுக்குள் உள்ளது என்றால் மக்கள் முதல்வர் ஜெயலலிதா வழிகாட்டுதலின் பேரில் தமிழக காவல்துறைக்கு ஆக்கமும், ஊக்கமும் அளித்து அத்துறைக்கு பல்வேறு திட்டங்களை அளித்ததின் பயனாக இன்று இந்தியாவில் தமிழ்நாடு அமைதி பூங்காவாக உள்ளது.திருப்பூர் மாவட்ட காவல்துறை திருப்திகரமாக உள்ளது.திருப்பூர் காவல்துறைக்கு பல்வேறு சிறப்பு திட்டங்களை ஜெயலலிதா தார் உள்ளார். அந்த வகையில் திருப்பூர் மாநகர காவல் ஆணையகரத்திற்கு சொந்தமாக அலுவலகம் அமைய நான் உறுதுணையாக இருப்பேன். இவ்வாறு அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் பேசினார்.
முன்னிலை வகித்த மாநகர காவல்துறை ஆணையாளர் எஸ்.என்.சே ஷசாய் பேசியதாவது:-
மக்களுக்கு ஏதேனும் சம்பவங்கள் நிகழ்ந்தால், 94876 61100, 94897 71100 ஆகிய கைப்பேசி எண்களுக்கு குறுஞ்செய்தி (எஸ்.எம்.எஸ்.)அனுப்பினால், காவல் கட்டுப்பாட்டு அறை மூலமாக சம்மந்தப்பட்ட காவல்துறை ஆய்வாளருக்கு உடனடியாகத் தகவல் தெரிவிக்கப்படும். இதன் மூலமாக காவல் துறையினர் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள முடியும். குறுஞ்செய்தி தகவல் மையத்திற்கு தகவல் தெரிவிப்போருக்கு உரிய பதிலும் குறுஞ்செய்தி மூலமாக அனுப்பி வைக்கப்படும். இது கட்டணமில்லா சேவையாகும். சென்னை மாநகருக்கு அடுத்தபடியாக திருப்பூரில் இச்சேவை ஏற்படுத்தப்பட்டுள்ளது. பிரச்னைகள் குறித்து முன்கூட்டியே தகவல் கிடைத்தால் அதை சமாளித்து தீர்வு காண முடியும். போக்குவரத்து நெருக்கடி, குடிபோதையில் தகராறு செய்வது, பொது இடத்தில் தொந்தரவு செய்வது, சாலை மறியல் உள்ளிட்ட சட்டம்-ஒழுங்கு பிரச்னைகளை கட்டுப்படுத்த இது உதவியாக இருக்கும்.பாதுகாப்பான திருப்பூராக மாற்றுவதற்காக, பல பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன
மேலும், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை பிரச்னைகள் தொடர்பாக மக்கள் குறுஞ்செய்தியில் தகவல் அனுப்பினால் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்குத் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும். குறுஞ்செய்தி தகவல் மையத்திற்கு அனைத்துத் தரப்பினரும் தகவல் அனுப்பலாம். அது உண்மையாக இருக்க வேண்டும். இச்சேவைப் பணி வெற்றியடைய அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். மாநகர காவல்துறைக்கு தற்போது 100 இளம் காவல்படையினர் உள்ளனர். மேலும் 250 இளம் காவல் படையினர் விரையில் வர உள்ளனர்.
கூடுதலாக, புதிய வாகனங்களும் விரைவில் மாநகர காவல்துறைக்கு வழங்கப்பட உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
மேயர் அ.விசாலாட்சி பேசும்போது, இத்திட்டம் வெற்றிகரமாக செயல்பட 60 வார்டுகளில் ஒவ்வொரு வார்டுக்கும் முதலாவதாக தலா 5 அறிவிப்பு பலகைகள் மாநகராட்சி சார்பில் பேனர்கள் அமைக்கப்படும் என்று கூறினார்.
நிகழ்ச்சியில் துணை மேயர் சு.குணசேகரன், மண்டல தலைவர்கள் வி.ராதாகிருஷ்ணன், ஜெ.ஆர்.ஜான், தொழில் அதிபர்கள் ஈஸ்ட்மென் சந்திரன்,ராம்ராஜ் காட்டன் நாகராஜ், கே.எம்.சுப்பிமணியம், எஸ்பி.என்.பழனிச்சாமி, அட்லஸ் சி.லோகநாதன், உஷா ரவிகுமார், கிளாசிக் போலோ சிவராம், சக்தி பிலிம்ஸ் சுப்பிரமணியம், அண்ணா தி.மு.க.நிர்வாகிகள், பொதுமக்கள ஆகியோர் கலந்து கலந்து கொண்டனர்.
முடிவில் மாநகர காவல் துணை ஆணையர் சுந்தரமூர்த்தி நன்றி கூறினார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பாசனத்திற்கும், குடிநீர் தேவைக்காகவும் அமராவதி அணையில் இருந்து உடனடியாக தண்ணீர் திறக்க வேண்டும் என்று திமுக மாவட்டச் செயலாளர் மு....
-
தமிழக-கேரள எல்லையில் உள்ள உடுமலை வனப்பகுதியில் மாவோயிஸ்டுகள் ஊடுருவியுள்ளனரா என க்யூ பிரிவு போலீஸார், வனத் துறையினர் தீவிர விசாரணை...
-
The 10 th mid-year Chemical Research Society of India (CRSI) Symposium in Chemistry was jointly organized by National Ins...
-
திருச்சி தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர் சங்கம் சார்பில் 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் தழுவிய மண்டல சாலை மறியல் போராட்டம் நடை...
-
பள்ளி மாணவ மாணவிகளுக்கான ஓவியப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா! திருச்சி டிசைன் ஓவியப்பள்ளி சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக...
-
கர்நாடக உயர் நீதிமன்றம்| கோப்புப் படம் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு 1991-96 காலக்கட்டத்தில் ஹைதராபாத் திராட்சை தோட்டம் மூலம...
0 comments:
Post a Comment