Sunday, November 23, 2014

On Sunday, November 23, 2014 by farook press in ,    
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் திருப்பூர் மாநகர் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் மாவட்ட தலைவர் சலீம் தலைமையில் நடைபெற்றது. மனித நேய மக்கள் கட்சியின் செயலாளர் அபுசாலி, த.மு.மு.க மாவட்ட செயலாளர் முஜிபுர்ரகுமான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொருளாளர் சாதிக் வரவேற்று பேசினார். மாநில துணை செயலாளர் கோவை சாதிக் பேசினார். மாவட்ட செயலாளர்கள், பல்வேறு அணி நிர்வாகிகள், வடக்கு, தெற்கு பகுதி நிர்வாகிகள் உள்பட பலர் திரளாக கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் திருப்பூர் மாவட்டம், மாநகர பகுதிகளில் த.மு.மு.க.வின் சார்பில் டிசம்பர் 6–ந்தேதி காலை 10–30 மணி அளவில் திருப்பூர் ரெயில் நிலையம் முன்பு கருப்பு சட்டை அணிந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது. இதில் சுமார் 5 ஆயிரம் பேர் கலந்து கொள்வது. டிசம்பர் 1–ந்தேதி முதல் 5–ந்தேதி வரை பாபர் மசூதியை கட்டித்தரக்கோரி மாவட்டத்தில் இருந்து சுமார் 50 ஆயிரம் தபால் கார்டுகள் இந்திய ஜனாதிபதிக்கு அனுப்புவது. பாபர் மசூதி நிலத்தை முஸ்லிம்களிடம் ஒப்படைக்க மத்திய அரசை வலியுறுத்துவது, லிம்ரன் கமிஷன் பரிந்துரை செய்த பாபர் மசூதி வழக்கில் குற்றவாளிகள் 67 பேர் மீதும் நடவடிக்கை எடுக்க உச்சநீதிமன்றத்தை வலியுறுத்துவது என கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது

0 comments: