Sunday, November 23, 2014

On Sunday, November 23, 2014 by farook press in ,    
சுல்தான்பேட்டை பகுதியில் தென்னை மரங்களில் காய் பிடிப்பு திறன் அதிகரித்துள்ளது.
15 லட்சம் தென்னை மரங்கள்
சுல்தான்பேட்டை ஒன்றி யத்தில் சுமார் 15 லட்சம் தென்னை மரங்கள் உள்ளன. தென்னை மரங்கள் வளர்ப் புக்கு முக்கிய தேவையாக தண் ணீர் உள்ளது. ஆனால் சுல்தான்பேட்டை பகுதியில் கடந்த சில ஆண்டுகளாக போதிய மழை வளம் இல்லாத தால் கடும் வறட்சி நிலவி வந்தது.
வறட்சிக்கு தாக்கு பிடிக்க முடியாமல் தென்னை மரங்கள் ஒவ்வொன்றாக கருக தொடங்கின. சுமார் 50 ஆயிரம் மரங்கள் கருகின. ஆயிரக்கணக்கான தென்னை கள் காய்ப்பு திறனை முற்றி லுமாக இழந்தன. இதனால் தென்னை விவசாயிகள் கடும் வேதனை அடைந்தனர்.
காய் பிடிப்பு திறன்அதிகரிப்பு
மேலும் வறட்சி காரணமாக தென்னை மரங்களில் காய்கள் விளைச்சல் மூன்றில் ஒரு பங்கு குறைந்தது. விளைச்சல் குறைந்ததால் வெளி மார்க் கெட்டில் தேங்காய், கொப் பரை, இளநீர் விலை கிடு,கிடு என உயர்ந்தது. இது தென்னை விவசாயிகளின் மனதை சற்று குளிரச் செய்தது.
இந்த நிலையில் கடந்த 2 மாதங்களாக சுல்தான் பேட்டை பகுதியில் அவ்வப் போது கனமழையும், சாரல் மழையும் பெய்தது. இதன் காரணமாக வறட்சியின் கோரப்பிடியில் சிக்கி இருந்த தென்னை மரங்கள் படிப்படி யாக பசுமையாக மாறத் தொடங்கின. மேலும் தென்னை மரங்களில் காய் பிடிப்பு திறன் அதிகரிக்க தொடங்கியது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
உரமிடும் பணி
மேலும் கடந்த பருவத்தை விட தற்போதைய பருவத்தில் மிக அதிக எண்ணிக்கையில் தேங்காய், இளநீர் விவசாயி களுக்கு கிடைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக வருவாய் அதிகரிக்கும் நிலை உள்ளதால் தற்போது சுல்தான் பேட்டை வட்டாரத்தில் உள்ள தென்னை விவசாயிகள் பலர் பல மாதங்களுக்கு பின்னர் மரங்களை ஆர்வமுடன் பராமரிக்கும் பணியில் ஈடுபடத் தொடங்கி உள்ளனர்.
மேலும் தேங்காய், இளநீர் விளைச்சல் அமோகமாக இருக்க மரங்களின் வேர் பகுதியில் உரமிடும் பணியை யும் ஆர்வமுடன் செய்து வருகின்றனர்.

0 comments: