Sunday, November 23, 2014

On Sunday, November 23, 2014 by farook press in ,    
சுல்தான்பேட்டை பகுதி யில் கடந்த 1 மாதத்திற்கு பின் தற்போது புதிதாக காற்றலை அமைக்கும் பணி தொடங்கி உள் ளது. இதனால் நூற்றுக் கணக்கான தொழி லாளர் கள் மீண்டும் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர்.
காற்றாலைகள்
சுல்தான்பேட்டை, வதம்பச் சேரி, செலக்கரச்சல், அப்ப நாயக்கன்பட்டி, காமநாயக்கன் பாளையம், வாரப்பட்டி, சந்திராபுரம் உள்பட பல்வேறு இடங்களில் சுமார் 40–க்கும் மேற்பட்ட காற்றலைகள் உள்ளன. இந்த காற்றாலைகள் ஒவ்வொன்றும் ரூ.2 கோடி முதல் ரூ.6 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ளன.
கடந்த ஒரு மாத காலமாக சுல்தான்பேட்டை வட்டார பகுதியில் அவ்வப்போது தொடர்ந்து மழை பெய்து வந்தது. இதன் காரணமாக காற்றாலைகள் அமைக்கப் பட்டு இருந்த நிலங்களில் தண் ணீர் தேங்கி கடும் ஈரப்பதத்தை ஏற்படுத்தியது. இதனால் புதிதாக காற்றாலைகள் அமைப்பதற் கான இறக்கைகள் மற்றும் பிற உபகரணங்களை கனரக வாகனங்கள் மூலம் அமைவிடத்திற்கு எடுத்து செல்ல முடியாத அளவுக்கு ஈரப்பதம் இருந்தது.
மீண்டும் பணி தொடக்கம்
இதன் எதிரொலியாக ஒரு மாதமாக சுல்தான் பேட்டை பகுதியில் புதிதாக காற்றாலை அமைக்கும் பணிகள் நடைபெறவில்லை. மேலும் பழுதடைந்த இறக்கைக்கு பதில் புதிய இறக்கை மாற்றுவது மற்றும் பராமரிப்பு பணிகள் நடக்க வில்லை. இதனால் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்தனர்.
தற்போது மழை நின்று, வெயில் அடிக்கிறது. இதனால் காற்றாலை அமைக்கப்படும் இடங்களில் மண்ணில் இருந்த ஈரப்பதம் நன்கு காய்ந்து விட்டது. இதைத்தொடர்ந்து மீண்டும் புதிதாக காற்றாலை அமைக்கும் பணி மற்றும் பராமரிப்பு பணிகள் மும்முர மாக நடந்து வருகிறது. இத னால் தற்காலிகமாக வேலை வாய்ப்பு இழந்து இருந்த நூற்றுக்கணக்கான தொழிலா ளர்கள் மீண்டும் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர். இதன் காரணமாக அவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

0 comments: