Sunday, November 23, 2014
திருப்பூரில் ஒரு லட்சம் கண்காணிப்பு கேமராக்களை அமைத்து குற்றமற்ற நகரமாக்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் பேசினார்.
திருப்பூர் மாநகர காவல்துறை மற்றும் ஸ்ரீபுரம் அறக்கட்டளை சார்பில் ‘மூன்றாம் கண்’ கண்காணிப்பு கேமரா திட்டம் நேற்று அறிமுகம் செய்யப்பட்டது. முதல்கட்டமாக ரூ.18 லட்சம் செலவில் 50 கேமராக்கள் ஷெரீப்காலனி, குறிஞ்சிநகர், அரண்மனைபுதூர், நகர விரிவாக்கப்பகுதி ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த திட்டத்தின் தொடக்கவிழா ஸ்ரீபுரம் அறக்கட்டளை அலுவலகம் அருகில் உள்ள காஞ்சி காமாட்சி அம்மன் கோவில் வளாகத்தில் திருப்பூர் மாவட்ட கலெக்டர் கோவிந்தராஜ் தலைமையில் நடைபெற்றது. இதில் ஸ்ரீபுரம் அறக்கட்டளை தலைவர் சண்முகம் வரவேற்றார்.
‘மூன்றாம் கண்’ திட்டம் குறித்து திருப்பூர் மாநகர காவல் ஆணையாளர் சேஷசாய் பேசும்போது கூறியதாவது:–
திருப்பூர் தொழில் துறையினரின் சமூக நல ஆர்வத்தை பார்க்கையில் பெருமையாக உள்ளது. திருப்பூரின் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு முதல் கட்டமாக 50 கேமராக்களை அமைத்துள்ளனர். லண்டன் நகரில் மக்களின் பாதுகாப்பிற்காக 5 லட்சம் கேமராக்களை அமைத்துள்ளனர். திருப்பூரின் பாதுகாப்பிற்காக விரைவில் 60 வார்டுகளிலும் 1,500 கேமராக்களை அமைக்க திருப்பூர் தொழில் துறையினர் உறுதி அளித்துள்ளனர். இது மிகவும் நல்ல பணி. பெண்களுக்கு எதிரான குற்றங்கள், 2 சக்கர வாகனத்திருட்டு போன்ற பிரச்னைகள் இதன் மூலம் குறையும். கேமரா வைக்கப்பட்டுள்ளே என்பதற்காக பெண்கள் அதிக நகைகளை அணிந்து செல்ல வேண்டாம். பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வுடன் அவர்கள் இருக்க வேண்டும். இந்த திட்டம் தமிழகத்தின் பிற பகுதிகளுக்கும் கொண்டு செல்ல அனைத்து பணிகளையும் மேற்கொள்வோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
‘மூன்றாம் கண்’ கேமரா திட்டத்தை தொடங்கி வைத்து தமிழக வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம். ஆனந்தன் பேசியதாவது:–
மக்களை பாதுகாக்கும் திட்டங்கள் இன்று திருப்பூரில் தொடங்கப்பட்டுள்ளன. திருப்பூரின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காக திருப்பூர் பின்னலாடை தொழில் துறையினரின் உழைப்பும், ஆர்வமும் உள்ளது. இந்தியாவில் முதல் முயற்சியாக தமிழகத்தில் திருப்பூரில் கண்காணிப்பு கேமராக்களை அமைத்துள்ளனர். தாமாக முன்வந்து இந்த பணியை மேற்கொண்டுள்ள திருப்பூர் தொழில் துறையினரை பாராட்டுகிறேன்.
திருப்பூர் நகரில் ஒரு லட்சம் கண்காணிப்பு கேமராக்களை அமைத்து குற்றமற்ற நகரமாக்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும். முதல் கட்டமாக 50 கேமராக்களை அமைத்துள்ளனர். விரைவில் திருப்பூரில் ஒரு லட்சம் கண்காணிப்பு கேமராக்களை அமைத்து, குற்றமில்லா நகரமாக திருப்பூரை மாற்றியமைக்க அரசு தரப்பில் இருந்து அனைத்து உதவிகளையும் பெற்றுத்தருவேன்.
வெளிநாட்டு இறக்குமதி வர்த்தகர்கள் திருப்பூருக்கு சென்றால் அச்சம் இல்லாமல் பின்னலாடை வர்த்தகம் செய்யலாம் என்ற நிலையை உருவாக்க வேண்டும். அரசு தரப்பும், பொதுமக்கள் தரப்பும், தொழில் துறையினர் தரப்பும் இணைந்து நல்ல பல திட்டங்களை திருப்பூரில் உருவாக்க முழு ஒத்துழைப்பு வழங்குவேன். இந்த முயற்சிகளை மேற்கொண்டுள்ள ஸ்ரீபுரம் அறக்கட்டளை குழுவினருக்கு என் பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் திருப்பூர் மேயர் விசாலாட்சி, துணை மேயர் குணசேகரன், இந்திய தொழில் கூட்டமைப்பின் திருப்பூர் மாவட்ட தலைவர் ராஜா சண்முகம், துணை காவல் ஆணையர் திருநாவுக்கரசு, திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க செயற்குழு உறுப்பினர் விஜயகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர். ஸ்ரீபுரம் அறக்கட்டளை அறங்காவலர் யாஸ்கணேஷ் நன்றி கூறினார்.நிகழ்ச்சியில் ஸ்ரீபுரம் அறக்கட்டளை உறுப்பினர் வார்ஷா ராமு பேசுகையில், முதல் கட்டமாக 50 கேமராக்களை அமைத்துள்ளோம். விரைவில் தென்னம்பாளையம், பெரிச்சிபாளையம், டி.ஆர்.கே நகர், எம்.ஆர். நகர், அமர்ஜோதி கார்டன், கே.பி.என். காலனி, 15வேலம்பாளையம் ஆகிய இடங்களில் 45 முதல் 60 நாட்களுக்குள் 250 கேமராக்களை அமைக்க அனைத்து பணிகளும் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
‘நவீன கேமராக்களை இறக்குமதி செய்யும்போது வரிச்சலுகை வழங்கினால் மேலும் பல கேமராக்களை வாங்க முடியும். இதற்கு அரசு சார்பில் வரிச்சலுகை வழங்கினால் நன்றாக இருக்கும்’ என்று விழா மேடையிலேயே அமைச்சர் ஆனந்தனிடமும், கலெக்டர் கோவிந்தராஜிடமும் கோரிக்கை விடுத்தார். உடனே மேடையிலேயே இதற்கு ஆவண செய்யப்படும் என்று இருவரும் ஒப்புதல் அளித்தவுடன் கூட்டத்தில் இருந்த பார்வையாளர்கள் கைதட்டி மகிழ்ச்சியை தெரிவித்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு கபடி, சிலம்பம், கைப்பந்து கேரம், துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்...
-
சென்னை நகர போலீஸ் கமிஷனராக இருந்த டி.கே.ராஜேந்திரன் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டார். உடனடியாக அவர் பதவி ஏற்றுக்கொண்டார். தமிழக மக்களுக்கு பண...
-
பாண்டிபஜாரில் மாநகராட்சி கட்டிக்கொடுத்த வணிக வளாகத்தில் போதுமான வியாபாரம் இல்லாததால் வியாபாரிகள், தற்காலிகமாக கடைகளை காலி செய்துவிட்டு நடைப...
-
நாட்டுக்கு தான் சுதந்திரம் கிடைத்துள்ளது. மத சுதந்திரம் இன்னும் இந்துக்களுக்கு கிடைக்கவில்லை. நமது கோவிலை நாம்தான் நிர்வகிக்க வேண்டும். அரசு...
-
நிலக்கோட்டை, மதுரை அருகே உள்ள சிலைமான் பாசியாபுரத்தை சேர்ந்த கருப்பு மகன் முட்டைகண் பாண்டி. பிரபல ரவுடி. இவரை நேற்று முன்தினம் ஒரு கும்...
-
விருதுநகர்: சாத்தூர் வெங்கடாசலபுரம் ஜூம்மா பள்ளிவாசல் உள்ளிட்ட பகுதிகளில் கலையரசன் என்ற பெயரில் முஸ்லிம் மதம், அம்மக்களுக்கு அவதூறு ஏற்படுத...
-
மதுரை நாராயணபுரம் கண்மாய் கரை மணலை எடுத்து ரோட்டில் சாக்கடை பாய்வதை தடுத்துள்ளனர். அய்யர்பங்களா ரோட்டில் நாராயணபுரம் கண்மாய் எதிரே பிரதா...
-
கடலுர் மாவட்ட முன்னாள் நீதிபதி மாண்புமிகு. வைத்தியநாதன் அவர்கள் !!! திருச்சி பொதுநல வழக்கறிஞர் வேங்கை ராஜா அவர்களின் அலுவலகத்திற்கு வருகை!!...
-
100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் டி . பி . பூனாட்சி புகழாரம் திருச்சி புறநகர்...

0 comments:
Post a Comment