Thursday, November 27, 2014
திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் ஜி.கோவிந்தராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அதிகாரி பாரிவேல் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகளை மனுக்களாக கொடுத்தனர்.
திருப்பூர் காலேஜ் ரோடு 1–வது குறுக்குதெருவை சேர்ந்த செல்வராஜ் என்பவர் தனது மகளுக்கு இருதய அறுவை சிகிச்சைக்கு நிதிஉதவி வழங்க கோரி மனு ஒன்றை கொடுத்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது;–
நான் பனியன் நிறுவனத்தில் தையல் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறேன். எனக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். முதல் குழந்தை ரம்யா(வயது 6). கணியம்பூண்டியில் உள்ள தனியார் பள்ளியில் 1–ம் வகுப்பு படித்து வருகிறாள். கடந்த சில மாதங்களுக்கு முன் அவளுக்கு உடல் நிலை சரியில்லாமல் போனது. அவளை பரிசோதித்த டாக்டர்கள் அவளுக்கு இருதயத்தில் துவாரம் இருப்பதாகவும் உடனடியாக அறுவை சிகிச்சை செய்யும் படியும் அறிவுறுத்தினார்கள். ஆனால் மருத்துவ செலவுக்காக போதிய வருமானம் இல்லாததால் குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்ய முடியவில்லை. இதனால் அரசு சார்பில் அறுவை சிகிச்சை செய்ய போதிய நிதி அளித்து உதவ வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.
இந்திய திராவிட மக்கள் முன்னேற்ற கட்சி மற்றும் ஆதித்தமிழர் ஜனநாயக பேரவை சார்பில் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:–
திருப்பூர் மாவட்டத்தில் அரசால் அறிவிக்கப்பட்ட உபரிநிலங்கள் ஆதிதிராவிடர் சமூகத்தை சேர்ந்த குடும்பங்களுக்கு பிரித்து வழங்குவதாக அரசு திட்டமிட்டுள்ளது. இந்த திட்டத்தின் படி காங்கயம் தாலுக்கா பழைய கோட்டை, குட்டப்பாளையம் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு இந்த நிலங்களை வழங்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.
ஆதித்தமிழர் பேரவை சார்பில் கொடுக்கப்பட்ட மனுவில் கூறியிருப்பதாவது:–
திருப்பூர் மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் துப்புரவு பணியாளர்களை திருப்பூர் மாநகராட்சி ஆணையர் மற்றும் அதிகாரிகள் மனித கழிவுகளை கையால் அள்ளும் பணிகளில் ஈடுபடுத்தி வருகின்றனர். சட்டப்படி இது தடை செய்யப்பட்டதாகும். இதனால் மாவட்ட மற்றும் மாநகர நிர்வாகம், கண்காணிப்பாளர்கள் இந்த தடை சட்டத்தை அமல் படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.
பாரத் மக்கள் கட்சி சார்பில் கொடுக்கப்பட்ட மனுவில் கூறியிருப்பதாவது:–
திருப்பூர் மாவட்டம் முழுவதும் ஆவின்பால் மற்றும் தனியார் பால்விற்பனை முகவர்கள் அரசு நிர்ணயித்த விலையை விட கூடுதல் விலைக்கு பால் விற்பனை செய்து வருகின்றனர். ஏழைகள் மற்றும் குழந்தைகளின் பாதிப்பை கருத்தில் கொண்டு பால் விற்பனையாளர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
வாக்குப் பதிவின்போது வாக்காளர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளத் தேவையான ஆவணங்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்...
-
குளித்தலை -மணப்பாறை சாலையில் இரட்டை வாய்க்கால் பாலம் சீரமைப்பு பொதுமக்கள் பாராட்டு குளித...
-
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருவண்ணாமலை அருகே ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளரை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கை...
-
ஊழலை ஒழிப்போம் - புதிய இந்தியாவை உருவாக்குவோம்" என்ற செய்தியை பரப்புவதற்காக இந்தியன் ஆயில் நடத்தும் கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் வ...
-
அமராவதி அணையில் நீர் இருப்பு குறுவை சாகுபடி பணி மும்முரம் கரூர் அமராவதி அணை நீரை நம்பி விவசாயிகள் நெல், கரும்பு ...

0 comments:
Post a Comment