Thursday, November 27, 2014

On Thursday, November 27, 2014 by farook press in ,    
திருப்பூர் ராக்கியாபாளையம் பிரிவு பகுதியை சேர்ந்தவர் பிலோமினாள்(வயது 45). இவருக்கு மதுபழக்கம் இருந்துள்ளது. இவரை கடந்த 2007–ம் ஆண்டு ஜூலை மாதம் 10–ந்தேதி காணவில்லை என்று அவரது மகள் ரூரல் போலீசில் அளித்த புகாரில் பேரில் போலீசார் பிலோமினாளை தேடி வந்தனர். இந்த நிலையில் ரெயில் நிலையத்துக்கும் ராக்கியாபாளையத்துக்கும் இடையே உள்ள துண்டுகாடு என்ற பகுதியில் உள்ள கிணற்றில் பெண் பிணம் ஒன்று கிடப்பதாக ரூரல் போலீசுக்கு கிடைத்த தகவலின் பேரில் பிணத்தை மீட்டு விசாரணை நடத்தினார்கள்.
விசாரணையில் இறந்து கிடந்த பெண் உடல் 1 மாதத்துக்கு முன்பு காணாமல் போன பிலோமினாள் உடல் என்பதும், அவர் கொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்டிருப்பதும் தெரியவந்தது. இந்த கொலை வழக்கு சம்மந்தமாக நல்லூர் பிரபு நகர் பகுதியை சேர்ந்த ஜெகன் என்ற ஜெயசூர்யா(வயது 34), அவருடைய நண்பர்கள் ஸ்டாலின்(38), அலெக்ஸ் என்ற அலெக்ஸ்சாண்டர்(32) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். ஸ்டாலின் மற்றும் அலெக்ஸ் என்ற அலெக்சாண்டர் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.
இது குறித்த வழக்கு விசாரணை திருப்பூர் மகளிர் கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இதில் ஜெகன் என்ற ஜெயசூர்யா தனது நண்பர்களுடன் பிலோமினாளை அழைத்து சென்று மது குடிக்க வைத்து கற்பழித்து கொலை செய்து கிணற்றில் வீசியது உறுதியானது.
இதை தொடர்ந்து திருப்பூர் மகளிர் நீதிமன்ற நீதிபதி வசந்தலீலா குற்றவாளி ஜெகனுக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ரூ. 10ஆயிரம் அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பளித்தார். இந்த அபராதத்தை கட்டத்தவறினால், மேலும் ஒரு ஆண்டு கடுங்காவல் தண்டனையும் விதித்து உத்தரவிட்டார். இதில் அரசு தரப்பு சிறப்பு வக்கீல் வி.பரிமளா ஆஜரானார்.

0 comments: