Thursday, November 26, 2015

On Thursday, November 26, 2015 by Unknown in , ,    


தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 23.11.2015 அன்று பெய்த கனமழையின் காரணமாக காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது. இதன் காரணமாக கோரம்பள்ளம், புதுக்கோட்டை, அய்யனடைப்பு உள்ளிட்ட கிராமங்களில் வெள்ளம் ஏற்பட்டு குடியிருப்புகளில் தண்ணீர் புகுந்தது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவிற்கிணங்க மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் அவர்கள் 24.11.2015 அன்று பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரடியாக சென்று பார்வையிட்டு நிவாரணம் மற்றும் மீட்பு பணிகளை துரிதப்படுத்தினார்.
நேற்று (25.11.2015) மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் அவர்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள நபர்களுக்கு உணவு மற்றும் குழந்தைகளுக்கு பால், முதியவர்களுக்கு ரொட்டி மற்றும் போர்வைகளை வழங்கினார்.  முதலில் ஸ்பிக் நகர் ஞான மகாலில் தங்கியுள்ள 800 நபர்டகளுக்கு பொட்டலங்களை வழங்கினார். தொடர்ந்து முத்தையாபுரம் புனித அந்தோணியார் உயர் நிலைப்பள்ளியில் தங்கியுள்ள மக்களுக்கு பொட்டலங்களை மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் அவர்கள் வழங்கினார். தொடர்ந்து மதிகெட்டான் ஒடையில் செல்லும் உபரி நீரை சென்று பார்வையிட்டார்.

இந்த நிகழ்வின் போது மாவட்ட ஆட்சியர் ரவிக்குமார், வெள்ள நிவாரண சிறப்பு அலுவலர் குமார் ஜயந்த், மாநகராட்சி மேயர் அ.பா.ரா.அந்தோணி கிரேஸ், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் பி.டி.ஆர்.ராஜகோபால், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் கு.தமிழ்செல்வராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

0 comments: