Thursday, November 26, 2015

On Thursday, November 26, 2015 by Unknown in , ,    
தூத்துக்குடி துறைமுகம் வழியாக செம்மர கட்டைகள் கடத்தப்பட்டது எப்படி? என்று அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தூத்துக்குடி துறைமுகம் வழியாக நாள்தோறும் ஏராளமான பொருட்கள் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதில் கடந்த அக்டோபர் மாதம் 14-ந்தேதி பருத்தி ஆடைகள் என்ற பெயரில் கண்டெய்னர்களில் பார்சல்கள் அனுப்பி வைக்கப்பட்டன. இவை கப்பலில் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்ட பிறகு, சுங்கத்துறை அதிகாரிகளுக்கு குறிப்பிட்ட பார்சல்களில் செம்மர கட்டைகள் கடத்தப்படுவது தெரியவந்தது.

இதையடுத்து இந்த கட்டைகளை பிடிக்க கொச்சி, குஜராத் ஆகிய இடங்களில் உள்ள துறைமுகங்களுக்கு தகவல் கொடுத்து முயற்சி செய்தார்கள். ஆனால் அதற்குள் செம்மர கட்டைகள் துபாய் நாட்டில் உள்ள ஜெபலலி என்ற துறைமுகத்துக்கு போய்ச்சேர்ந்தது. பின்னர் அந்த துறைமுகத்துக்கு அதிகாரிகள் தகவல் தெரிவித்து செம்மர கட்டைகளை தூத்துக்குடி துறைமுகத்துக்கு மீண்டும் வரவழைத்தனர். அவை நேற்று முன்தினம் தூத்துக்குடி துறைமுகத்துக்கு வந்து சேர்ந்தன. அந்த பார்சல்களை பரிசோதனை செய்த போது, உள்ளே ரூ.2¼ கோடி மதிப்புள்ள 7 டன் செம்மர கட்டைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தூத்துக்குடி துறைமுகம் வழியாக செம்மர கட்டைகள் தப்பியது எப்படி? என்று அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

தூத்துக்குடி துறைமுகத்தில் மொபல் ஸ்கேனர் வசதி உள்ளது. மேலும் புதிதாக பெரிய ஸ்கேனர் வசதியும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மொபல் ஸ்கேனர் மூலம் இறக்குமதி செய்து நமது நாட்டுக்குள் கொண்டு வரப்படும் பொருட்களை மட்டுமே சுங்கத்துறை பரிசோதனை செய்வார்களாம். அதுவும் சந்தேகப்படும் பார்சல்களையும், குறிப்பிட்ட பார்சல்கள், கண்டெய்னர்களை மட்டுமே சோதனை செய்வார்கள். ஆனால் ஏற்றுமதி செய்யப்படும் பொருட்கள் ஸ்கேன் செய்யப்படாதாம். எனவே பருத்தி ஆடை என்ற உடன் அதிகாரிகள், அவற்றை ஏற்றுமதி செய்ய அனுமதி அளித்து இருக்கிறார்கள் என்பது தெரியவந்தது. இது தொடர்பாக அதிகாரிகள் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

0 comments: