Thursday, November 26, 2015

On Thursday, November 26, 2015 by Unknown in , ,    
தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் இந்திய அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்துறையின் இன்ஸ்பையர் அறிவியல் முகாம் தொடங்கியது. 5 நாட்கள் நடைபெறவுள்ள இம்முகாமில் தூத்துக்குடி. திருநெல்வேலி விருதுநகர் ஆகிய 3 கல்வி மாவட்டங்களில் உள்ள 35 பள்ளிகளிலிருந்து 180 மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவியர் கலந்து கொண்டுள்ளனர்.

துவக்கவிழாவில் முகாம் ஒருங்கிணைப்பாளர் வான்மதி வரவேற்றார். திருநெல்வேலிஇந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஜியோமேக்னடிஸம் தலைவர் சதீஸ் குமார் அறிவியல் முகாமைத் துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். சிறப்புரையில் அடிப்படை அறிவியல் கல்வியின் அவசியம்பற்றியும், தொழில்நுட்ப வளர்ச்சிதான் நாட்டினை மிக வேகமாக வளர்ச்சியடையச் செய்யும் என்றும், அறிவியல் குறித்த விழிப்புணர்வினை இந்h முகாம் மூலம் மாணவ, மாணவிகள் மற்றோர்களுக்கு எடுத்துரைக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

கல்லூரி முதல்வர் நாகராஜன் வாழ்த்துரை வழங்கினார். தனது வாழ்த்துரையில் பள்ளிப்பருவத்திலேயே மாணவ, மாணவியர்கள் ஆராய்ச்சி மேற்கொள்ளும் மனப்பாங்கினை வளர்த்துக் கொள்ளவேண்டும், அறிவியல் குறித்த விழிப்புணர்ச்சிக் கல்வியை ஆசிரியர்களிடம் கேட்டுப் பெற்றுக்கொள்ளவேண்டும், ஆராய்ச்சியாளர்கள் மட்டுமே எந்த நாட்டினைச் சார்ந்தவர்கள் என்பது எளிதாக எல்லோரிடமும் சென்று சேர்ந்து விடுகிறது. ஊதாரணமாக டாக்டர் அப்துல்கலாம் முதலில் சிறந்த விஞ்ஞானியாகவே உலகில் அடையாளம் காணப்பட்டார். நாட்டிற்கு அவரது பங்க அளப்பறியது. எனவே, மாணவ, மாணவியர்கள் சிறந்த விஞ்ஞானிகளாக உருப்பெறவேண்டும் என அறிவுறுத்தினார்.

சுயநிதிப்பிரிவின் இயக்குநர் சக்திவேல் முன்னிலை வகித்தார். வேதியியல் துறை ஆய்வக உதவியாளர் பரமேஷ்வரி நன்றியுரையாற்றினார். முகாமிற்கான ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் நாகராஜன், முகாம் ஒருங்கிணைப்பாளர் வான்மதி, ஆராய்சியாளர்கள் முத்துராஜ், தேவிப்பிரியா மற்றும் அலுவலர்கள் கலா, பிரியா, சுசிட்டா ஆகியோர் செய்திருந்தனர். மக்கள் தொடர்பு ஏற்பாடுகளை மக்கள் தொடர்புக்குழு தலைவர் பேராசிரியர் தேவராஜ் மற்றும் அலுவலர் சரவணன் சிறப்பாக செய்திருந்தனர்.

பத்தாம் வகுப்பில் 94சதவீதத்திற்கும் அதிகமாக மதிப்பெண்கள் வாங்கிய அறிவியல் துறையில் பயிலும் மாணவர்கள் இம்முகாமில் முற்றிலும் இலவசமாக பங்குபெற்றுள்ளனர். இதற்காக மாணவர்களுக்கு தங்கும் வசதிகளும் உணவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாணவர்களை அறிவியல் துறையில் ஊக்கத்தொகையோடு (ரூ. 8000 – ரூ. 45000 வரை) பயில வைத்து பல்வேறு ஆராய்ச்சிகளில் ஈடுபடுத்த செயல்திட்டங்கள் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது. மேலும் இளம் மாணவர்களின் அறிவியல் ஆர்வத்தை வளர்த்து அவர்களை சிறந்த விஞ்ஞானிகளாக உருவாக்கி அறிவியல் தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதே இம்முகாமின் நோக்கமாகும்.

0 comments: