Wednesday, November 05, 2014
தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கம் மூலம் தேவைக்கேற்ப உரங்களைத் தட்டுப்பாடின்றி விவசாயிகளுக்கு வழங்க உரிய நடவடிக்கை ........... கரூர் மாவட்டத்தில் அனைத்து விவசாயிகளுக்கும் தேவைப்படும் அளவுக்கு ஏற்ப உரங்களைத் தட்டுப்பாடு இல்லாமல் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் ஜெயந்தி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: நடப்பு ஆண்டில் வடகிழக்குப் பருவமழை தீவிரமாக தொடங்கியதைத் தொடர்ந்து விவசாயிகள் வேளாண் பணிகளை முடுக்கிவிட்டுள்ளனர். குறிப்பாக, சம்பா நெல் சாகுபடிக்கான நடவுப் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்குத் தேவைப்படும் ரசாயன உரங்கள் போதுமான அளவில் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களிலும், தனியார் உரக்கடைகளிலும் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.தமிழகத்தில் உள்ள இரு நிறுவனங்களில் யூரியா உரம் உற்பத்தி இல்லாததை தொடர்ந்து, தமிழக அரசின் முயற்சியால் கரூர் மாவட்டத்துக்குத் தேவையான உரங்கள் பிற நிறுவனங்கள் மூலம் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உயரி ஒதுக்கீடும் பெறப்பட்டுள்ளது.
கரூர் மாவட்ட சாகுபடி பயிர்களுக்கு தேவையான யூரியா உரம் நவம்பர் மாதத்தில் 1800 மெ.டன் ஆகும். இருப்பினும் பற்றாக்குறை ஏற்படாமல் யூரியா உரத் தேவையை பூர்த்தி செய்ய கூடுதலாக 600 மெ.டன் சேர்த்து 2400 மெ.டன்னுக்கு தமிழக அரசின் மூலம் ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது. இதில், பெருமளவு தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள் மூலம் விநியோகிக்கும் படி வேளாண் இணை இயக்குநரும், கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளரும் ஏற்கனவே அறிவுறுத்தியுள்ளனர்.
உர விநியோகத்தை கண்காணிக்க கரூர் மாவட்டத்தில் அமைக்கப்பட்ட சிறப்பு கண்காணிப்பு குழுவினர் கடந்த வாரம் 74 தனியார் உரக்கடைகளை ஆய்வுசெய்து 9 உர மாதிரிகள் பெறப்பட்டுள்ளன. இதன் முடிவைப் பொருத்து சட்டரீதியாக அல்லது துறைவாரியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தனியார் உரக்கடைகளில் அனுமதி இல்லாத நிறுவனங்களில் இருந்து உரம் பெற்றதை கண்டறிந்து 8 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 46 மெ.டன் உரங்களின் விற்பனை தடை செய்யப்பட்டுள்ளது. சிறிய குற்றங்கள் மேற்கொண்டமைக்காக 27 உரக்கடைகள் மீது விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அனைத்து விவசாயிகளுக்கும் தேவைப்படும் உரங்களை தட்டுப்பாடு இல்லாமல் வழங்க தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.
ரசீது கேட்டுப் பெற வேண்டும்
உர மூட்டைகளின் மேல் உள்ள விற்பனை விலைப்படியே உரம் விற்பனை செய்யப்பட வேண்டும். உரம் வாங்கும் விவசாயிகள் கண்டிப்பாக ரசீதை கேட்டுப் பெற வேண்டும். ரசீது பெற்றால் மட்டுமே தவறிழைப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியும். இது சம்பந்தமான புகார்களை அளிக்க விவசாயிகள் யூனியின் அலுவலக வளாகத்தில் உள்ள வேளாண் விரிவாக்க மையத்திலோ அல்லது மாவட்ட வேளாண் இணை இயக்குநர் அலுவலகத்திலோ உடனடியாக தொடர்பு கொள்ள வேண்டும்.மேலும், மண்ணின் தன்மைக்கேற்ப மண்மாதிரி முடிவுகளின்படியே உரமிட வேண்டும். அதிகளவு யூரியா இடுவது மண்ணின் வளத்தை பாதிப்பதோடு பயிர்களுக்கும் பூச்சிகளால் அதிக சேதராம் ஏற்படும். ஆகவே, தேவையறிந்து உரமிட்டும், புதிய தொழில்நுட்பத்தை கடைபிடித்தால் விவசாயிகள் அதிக வருமானம் பெறலாம்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
தர்மபுரி தொகுதி எம்.பி.யும், பா.ம.க. இளைஞர் அணி தலைவருமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் திருப்பூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அ...
-
சிவன்மலை கோயிலில் பக்தர்கள் பயன்படுத்தி வரும் யானைத்தடம் பாதை தற்போது மூடப்பட்டுள்ளது. இதை திறந்து விட வேண்டும் என பக்தர்கள் வேண்டுகோள் வி...
-
திருப்பூரில் நடந்த கூட்டுறவு வார விழாவில் மகளிர் சுய உதவிக்குழு கடன், பயிர் கடன், மாற்று திறனாளிகள் கடன் என 591 பேருக்கு ரூ.3.52 கோடி மதிப...
-
பாரதி புத்தகாலயம், பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 12வது திருப்பூர் புத்தகத் திருவிழா வெள்ளியன்று சிறப்பாகத் தொடங்கியது. திருப்பூர...
-
கைது சிறை தவிர்ப்பதற்கு கிலோ கணக்கில் சிலை வழங்கப்பட்டதா ? திருச்சி மன்னார்புரத்தில் தலைமை அலுவலகம் அமைத்து செயல்பட்டு வரும் நிதிநிறு...
-
உடுமலை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் புதன்கிழமை இரவு சுமார் 3 மணி நேரம் பலத்த மழை பெய்தது. இதனால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தன...
-
*திருச்சிராப்பள்ளி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா வைரஸ் நோய் தொற்று தொடர்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு தகவல்* ...
-
திருப்பூர் கேத்தனூர் ஊராட்சி எட்டமமநாயக்கன்பாளையத்தில், அரசின் தொகுப்பு வீடுகளையும், அந்த பகுதியின் அம்மா நகர்' பெ...
0 comments:
Post a Comment