Tuesday, November 11, 2014

On Tuesday, November 11, 2014 by Unknown   





அனைத்து பத்திரிகை தோழர்களே..!

ஊடக நண்பர்களே..!!
தோளோடு தோளாக நின்று பணியாற்றிய மாநில – மாவட்ட நிர்வாகிகளே...!!!
ஆலம் விழுதுகளைப் போல் சங்கத்தை தாங்கி நிற்கும் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட சங்க உறுப்பினர்களே.!
          அனைவருக்கும் தமிழ்நாடு யூனியன் ஆப் ஜெர்னலிஸ்டின் சார்பாக நெஞ்சார வாழ்த்துக்களையும்மனம் மகிழ்ந்த நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
        வரலாற்றில் ஒரு மெயில் கல்லாக நாம் நமது 14-வது மாநில மாநாட்டை பத்திரிக்கை உலக ஏட்டில் பதிவு செய்துள்ளோம். மறைந்த தோழர். ரவீந்திரதாஸ் உட்பட மறைந்த பத்திரிகையாளர்களுக்கு இரண்டு (2) நிமிட மவுனம்.
        மறைந்த தலைவர் தோழர்.டி.எஸ்.ரவீந்திரதாஸ் அவர்களின் ஆசியோடு நம்மால் பெரும் போராட்டங்களுக்கும்புகைச்சல்களுக்கும் மத்தியில் நடத்தப்பட்ட முதல் மாநில மாநாடு இதுவேயாகும்.
        தென்கோடி பகுதியான குற்றாலத்தில் 08.11.2014 சனிக்கிழமையன்றுகுற்றாலம் ஸ்ரீமுருகன் மகாலில் சுமார்ஆயிரத்துக்கும் மேற்பட்ட சங்க உறுப்பினர்களாலும்அகில இந்திய தலைவர்களாலும் மிகச் சிறப்பாக நடத்தப்பட்டது.
        மாநாட்டு துவக்கத்தின் முதல் நிகச்சியாக நம் சங்க அ.இ.த. கொடியை S.N.சின்ஹா முன்னிலையில் ஜனாதிபதி விருது பெற்ற ஹில்டன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர் R.J.V. பெல் அவர்களால் ஏற்றிவைக்கப்பட்டது. 
அகில இந்திய தலைவர்கள், பல்வேறு அரசியல் பிரமுகர்கள், ஏராளமான சங்க உறுப்பினர்கள் மத்தியில் ஏற்றிவைக்கப்பட்ட அக்கொடி நம் சங்கம் பெருமையை பறைசாற்றும் விதமாக பட்டொளி வீசிப் பறந்தது.

மாநாட்டின் அடுத்தகட்ட ஆரம்பமாக தமிழ்த்தாய் வாழ்த்து ஒலிக்கப்பட்டு குத்துவிளக்கு ஏற்றப்பட்டது.
               பல்வேறு கதம்ப மாலையாக பல்வேறு துறை அறிஞர்களால் அரங்கமும்மேடையும் அலங்கரிக்க நெல்லை G.பரமசிவம் அவர்கள் வரவேற்புரை வழங்கினார். நமது மாநிலத் தலைவர் தோழர்.டி.எஸ்.ஆர்.சுபாஷ் அவர்கள் இம்மாநாட்டிற்கு தலைமை தாங்கினார்.
               அகில இந்திய பத்திரிகையாளர் சங்க தலைவர் தோழர்.S N.சின்ஹா கேரள மாநிலத் தலைவர்  ராஜன்செயலார் சம்சுதீன்கர்நாடக மாநிலத் தலைவர் கௌடா,செயலாளர் பாஸ்கரரெட்டிபுதுவை மாநிலத் தலைவர் திரு.M.P.மதிமகராஜாசெயலாளர் பழனிச்சாமிமது ஒழிப்பு அமைப்பின் தலைவர் சசிபெருமாள்இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தொழ்றும்முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தோழர்.நூர் முகமது (தேசிய செயற்குழு உறுப்பினர்) தமிழக அரசியல் கட்சித் தலைவர்களான திரு.பழ.நெடுமாறன்,தொல்.திருமாவளவன்சுப.வீரபாண்டியன்முன்னாள் ஆட்சித் தலைவர் சிவகாமி I.A.S, 'நீதியின் குரல்சி.ஆர்.பாஸ்கரன்அமெரிக்க நாராயணன்கலைஞர் தொலைக்காட்சி  பொது மேலாளர் பெரைராமெகா தொலைக்காட்சி தொகுப்பாளர் ஆதவன் மற்றும் பத்திரிகையாளர்கள்கவிஞர்கள்எழுத்தாளர்கள்மாவட்ட தொழில் மைய பொது மேலாளர்P.மாரியம்மாள், 'தென்காசிஸ்டேட் பாங்க் முதன்மை மேலாளர் பாபு சுந்தரம், 'தென்காசி'பிரஸ் கிளப் தலைவர் முத்துசாமி) ஆகியோர் 
கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.
               மாநாட்டின் சிறப்பம்சமாக "பத்திரிகையாளார் குரல்" சிறப்பிதழ் அகில இந்திய தலைவர் தோழர்.S.N.சின்ஹா அவர்கள் வெளியிட கலைஞர் தொலைக்காட்சி பொது மேலாளர் திரு.பெரைரா அவர்கள் பெற்றுக்கொண்டார்.
              
               மறைந்த பத்திரிகையாளர்களான மறைந்த தலைவர் தோழர்.டி.எஸ்.ரவீந்திரதாஸ் படத்தை தோழர்.S.N.சின்ஹாவும், திறனாய்வுத் தென்றல் தி.க.சிவசங்கரன் அவர்கள் படத்தை பழ.நெடுமாறன் அவர்களும், 'நெல்லை' ராமகிருஷ்ணன் அவர்கள் படத்தை மெகா தொலைக்காட்சி ஆதவன் அவர்களும், தென்காசி லோகநாதன் படத்தை கலைஞர் தொலைக்காட்சி பொது மேலாளர் திரு.பெரைரா அவர்களும் திறந்து வைத்தனர். மறைந்த பத்திரிகையாளர் தோழர்.'நெல்லை' உட்லேண்ட் ராமகிருஷ்ணன் குடும்பத்திற்குரிய குடும்ப நிதி தேசிய தலைவர். S.N.சின்ஹா அவர்கள் மூலம் வழங்கப்பட்டது.

               விடுதலைப் போராட்டக் காலத்தில் பத்திரிகைகளின் பங்கு மகத்தானது. நாட்டில் மாற்றமும்மறுமலர்ச்சியும் நம் போன்ற பத்திரிகையாளர்களால் மட்டும் கொண்டுவரமுடியும்,உலக மொழிகளுக்கு அப்பால் பத்திரிகைகளால் மட்டுமே மக்களே ஒருங்கிணைத்து உயர்த்த முடியும். பத்திரிகையாளர்கள் தான் அரசுக்கும்மக்களுக்கும் இடையில் பாலமாக அமைய முடியும்அரசின் குறைகளை எடுத்துரைக்கும் பத்திரிகையாளர்கள்தான் மக்களின் சேவகர்கள் என்பன போன்ற கருத்துக்கள் அரங்கில் பதிவு செய்யப்பட்டன.
               தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் பஸ்,வேன்இரயில்ஆகாய விமானம் மூலம் ஆயிரக்கணக்கானோர் உற்சாகமாக கலந்து கொண்டு அரங்கையே தன் கைத்தட்டல்கள் மூலம் அதிரச் செய்தனர். அரங்கில் அமர இடமில்லாமல் அதைச்சுற்றியுள்ள வராண்டா பகுதியும் நிரம்பி வழிந்தது. காண ஆச்சரியமாக இருந்தது.
 முக்கிய மாநில நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டனர்.
 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட அது ஏகமதாக கரகோஷத்துடன் அங்கீகரிக்கப்பட்டது.
 திருப்பதியில் கொடுத்த அங்கீகாரம் சான்றிதழை தற்போது அனைத்து மாவட்ட உறுப்பினர்கள் அறியும் வகையில் அகில இந்திய தலைவர் தோழர்.S.N.சின்ஹா அவர்கள் அங்கீகார சான்றிதழை தலைவர் முன் அளித்து அதிரச் செய்தார்.
  மாநாட்டிற்காக உழைத்த அனைத்து நெஞ்சங்களுக்கும், பல்வேறு வேலைகளுக்கிடையே நமக்கென நேரத்தை ஒதுக்கி மாநாட்டில் கலந்து கொண்டு சிறப்பித்த அனைத்து தலைவர்களுக்கும், 'தென்காசி' சண்முகம் நன்றி தெரிவித்துக்கொண்டார். தேசிய கீதத்துடன் கூட்டம் இனிதே முடிந்தது.


                          நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

1)   தமிழ்நாட்டில் பத்திரிகையாலர்களுக்கென தனி நல வாரியம் 
       ஒன்று அமைக்கப்படவேண்டும்.

2)   மகாகவி பாரதி பிறந்த தினமான டிசம்பர் 11-ஆம் தேதியை 
   பத்திரிகையாளர்  தினமாக அரசு அறிவிக்க வேண்டும்.

3)   பத்திரிகைகள் மீதான தாக்குதல்களை விசாரிக்க நாடாளுமன்ற
        சட்டமன்ற உறுப்பினர்கள்ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ் அதிகாரிகள், 
        பத்திரிகையாளர் நலச் சங்கங்களின் பிரதிநிதிகளைக் கொண்ட 
       "நிலைக்குழு" (STANDING COMMITTEE ஒன்றை அரசு தரப்பில் அமைக்க 
        வேண்டும்.

4)  பத்திரிகையாளர்களுக்கு ஒரு சில மாவட்டங்களில் மட்டுமே,  
      வீட்டுமனைப் பட்டாக்கள் தமிழக அரசால் வழங்கப்பட்டுள்ளன. 
      மாநிலத்தில் தாலுகா அளவில் உள்ள பத்திரிகையாளர்கள் உட்பட 
      அனைவருக்கும் மானிய விலையிலோஇலவசமாகவோ வீட்டுமனைகள் 
      வழங்கப்படவேண்டும்.
 5)  அரசு அலுவலகங்கள்காவல்துறை அதிகாரிகள்அரசியல் 
            பிரமுகர்கள் போன்றோர் அனைத்து பத்திரிகையாளர்களையும்
பாரபட்சமின்றிகண்ணியமாகவும்தோழமை உணர்வோடும் நடத்தவேண்டும்.

6)  அரசு மருத்துவமனையில் நாடாளுமன்ற – சட்டமன்ற உறுப்பினர்கள் போன்றோருக்கு முன்னுரிமை அளிக்கும் சிறந்த சிகிச்சை பத்திரிகையாளர்களுக்கும் கிடைக்கவேண்டும்.

7) தென்காசியை தலைமையிடமாக கொண்டு தனி மாவட்டம் அமைக்க வேண்டும்.
 8)   மாவட்ட அளவிலான அனைத்து பத்திரிகையாளர்களுக்கும் இலவச  பேருந்து பயணச் சலுகைகளை வழங்கவேண்டும்.

9) தமிழகத்தில் உள்ள அனைத்து பத்திரிகையாளர்களுக்கும் அரசு மானிய விலையில்(அல்லது) இலவசமாக வீட்டுமனைகளை வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தோழமையுடன்

 

(அல்லா பகேஷ்.D)
தலைமை நிலைய செயலாளர்,
அலைப்பேசி எண்: 98407 04576

0 comments: