Thursday, January 08, 2015
இந்த சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
அய்யப்ப பக்தர்கள்
கர்நாடக மாநிலம் பெல்காம் மாவட்டம் கோகாஸ் அருகே மசுக்குட்டியை சேர்ந்த லிங்கைய்யாசாமி(வயது 65), முருகப்பா(55), சிவானந்தா(40), சிவானந்த்(45), லிங்கமப்பா(59) உள்பட 9 பேர் கடந்த 30-ந் தேதி தங்களது ஊரில் இருந்து புறப்பட்டு சபரிமலைக்கு ஜீப்பில் சென்றனர். ஜீப்பை அதே பகுதியைச் சேர்ந்த சதாசிவத்தின் மகன் சிவராஜ்(24) என்பவர் ஓட்டினார்.
சபரிமலைக்கு சென்று சாமி தரிசனம் செய்து விட்டு பின்னர் பழனியில் உள்ள முருகன் கோவிலில் நேற்றுமுன்தினம் சாமி தரிசனம் செய்தனர். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு திருப்பூர் வழியாக சத்தியமங்கலம் சென்று கர்நாடக மாநிலத்தை அடைந்து சொந்த ஊருக்கு செல்ல திட்டமிட்டனர். இதன்படி நேற்று அதிகாலை 1½ மணி அளவில் அவர்கள் வந்த ஜீப் திருப்பூர் தாராபுரம் ரோடு கரட்டாங்காடு பஸ் நிறுத்தம் அருகே வந்து கொண்டு இருந்தது.அப்போது திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த ஜீப், ரோட்டோரம் நிறுத்தப்பட்டு இருந்த சரக்கு லாரியின் பின்பகுதியில் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் ஜீப்பின் முன்பகுதி லாரியின் பின்பகுதிக்குள் புகுந்து விட்டது. இதன்காரணமாக ஜீப்பில் இருந்த லிங்கைய்யாசாமி, முருகப்பா ஆகிய 2 பேரும் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.
மேலும் சிவானந்தா, சிவானந்த், லிங்கமப்பா, டிரைவர் சிவராஜ் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். மற்ற 4 பேர் லேசான காயமடைந்தனர். சம்பவம் பற்றி அறிந்ததும் திருப்பூர் தெற்கு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். ஜீப்புக்குள் இடிபாடுகளில் சிக்கி இருந்த லிங்கைய்யாசாமி, முருகப்பா ஆகியோரின் உடலை மீட்டு திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். படுகாயமடைந்த 4 பேரையும் மீட்டு திருப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து திருப்பூர் தெற்கு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
Hollywood star Richard Gere on Monday met Prime Minister Narendra Modi in New Delhi on Monday. Gere is also chairman of Gere Foundatio...
-
மலேசியா வில் நடக்கும் உலக அளவில் பங்கேற்க சிலம்பபோட்டியாளர்கள் மாவட்ட ஆட்ச்யரிடம் மனு ...
-
மதுரை மாவட்டம் பரவை பகுதியில் அமைந்துள்ள மங்கையர்கரசி கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற தொழில் முனைவோர் விழிப்புணர்வு கருத்தரங்கில் உரை ய...
-
மதுரையில் தமிழ்நாடு நாடக நடிகர் சங்கம் சார்பில் சங்கரதாஸ் சுவாமிகள் குருபூஜை நிகழ்ச்சி சங்கத் தலைவர் மோகன் தலைமையில் நடந்தது. நிர்வாகிகள் ...
-
LnDr J Ganesh முகநூல் செய்தி. QUIZ COMPETITION among college and school students on EYE DONATION AWARENESS on the eve of 30 th National Eye...
-
பாரதி புத்தகாலயம், பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 12வது திருப்பூர் புத்தகத் திருவிழா வெள்ளியன்று சிறப்பாகத் தொடங்கியது. திருப்பூர...
-
அத்துமீறி அண்ணன் வீட்டுக்குள் புகுந்த வாலிபரை தட்டிக்கேட்ட தம்பியை கத்தியால் குத்தி கொலை. திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள முள்ளா...

0 comments:
Post a Comment