Thursday, January 08, 2015

On Thursday, January 08, 2015 by farook press in ,    
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டரின் நிர்வாக நடைமுறையை கண்டித்து தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் சார்பில் திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் திருப்பூர் மாவட்ட தலைவர் சைபுதீன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் விஜயன் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தின் போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் சங்க துணைத்தலைவர்கள் செலஸ்தீன், கல்யாணசுந்தரம், அருள் இணை செயலாளர் குமரவேல் உள்பட திருப்பூர் மாவட்டத்தில் பணியாற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்

0 comments: