Thursday, January 08, 2015

On Thursday, January 08, 2015 by farook press in ,    
விடிந்த பிறகும் பனிப்பொழிவு குறையவில்லை. மழை சாரல் போன்று பனித்துளிகள் விழுந்தன. இதனால் ரோட்டில் நடந்தும், இரு சக்கர வாகனத்தில் சென்றவர்களும் லேசான மழையில் நனைந்தது போன்ற நிலையை உணர்ந்தனர்.
உடுமலை நகரின் வடக்குப்பகுதியில் பனிப்பொழிவு கடுமையாக இருந்தது. ரோட்டில் சில அடிகள் தூரத்தில் சென்றவர்கள் கூட அடையாளம் தெரியாத அளவிற்கு பனி இருந்தது. இதனால் பஸ், வேன், கார், லாரி ஓட்டுனர்கள் மற்றும் இரு சக்கர வாகனங்களில் சென்றவர்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி சென்றனர்.

0 comments: