Wednesday, January 07, 2015

On Wednesday, January 07, 2015 by farook press in ,    
திருப்பூரில் அனுமதியின்றி மதுவிற்ற பார் ஊழியர்கள் 8 பேரை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:–

மிலாடி நபியையொட்டி கடந்த 4–ந் தேதி திருப்பூர் மாவட்டம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்களை மூட கலெக்டர் ஜி.கோவிந்தராஜ் உத்தரவிட்டார். இருப்பினும் பார் ஊழியர்கள் மதுவை பதுக்கி வைத்து விற்பனை செய்தனர். அவர்களை போலீசார் கைது செய்தனர். அதன்படி திருப்பூர் காலேஜ் ரோட்டில் மதுவிற்பனை செய்த பார் ஊழியரான கார்த்திக்கை(வயது 23) திருப்பூர் வடக்கு போலீசார் கைது செய்து 9 மதுபாட்டில்கள், ரூ.120–ஐ பறிமுதல் செய்தனர்.
அதுபோல் காலேஜ் ரோட்டில் அனுமதியின்றி மதுவிற்பனை செய்ததாக பார் ஊழியரான ராஜ்குமார்(25) என்பவரை கைது செய்து 5 மதுபாட்டில்கள், ரூ.110–யும், 2–வது ரெயில்வே கேட் அருகே மதுவிற்பனை செய்த பார் ஊழியரான குணசேகரன்(25) என்பவரை கைது செய்து 5 மதுபாட்டில்கள், ரூ.900–ஐ திருப்பூர் வடக்கு போலீசார் பறிமுதல் செய்தனர்.
திருப்பூர் ராக்கியாபாளையம் பிரிவில் மதுவிற்பனை செய்ததாக பார் ஊழியரான அன்னமார் காலனியைச் சேர்ந்த செல்வத்தை(31) கைது செய்து 6 மதுபாட்டில்கள், ரூ.600–ம், தாராபுரம் ரோட்டில் மதுவிற்பனை செய்த பார் ஊழியரான பலவஞ்சிப்பாளையத்தைச் சேர்ந்த சந்திரன்(24) என்பவரை கைது செய்து 5 மதுபாட்டில்கள் ரூ.640–ஐ திருப்பூர் ஊரக போலீசார் கைது செய்தனர்.
திருப்பூர் ஜம்மனை பள்ளத்தில் மதுவிற்பனை செய்த பார் ஊழியரான ராமநாதபுரம் மாவட்டம் மனகுடியைச் சேர்ந்த ராஜாவை(23) போலீசார் கைது செய்து ஒரு மதுபாட்டில், ரூ.800–ஐ திருப்பூர் தெற்கு போலீசார் பறிமுதல் செய்தனர். அதுபோல் செல்லம் நகர் பிரிவில் மதுவிற்பனை செய்த பார் ஊழியரான தேனியைச் சேர்ந்த அன்பழகனை(36) திருப்பூர் மத்திய போலீசார் கைது செய்தனர். அதுபோல் வ.உ.சி.நகர் பகுதியில் மதுவிற்பனை செய்த பார் ஊழியரான புதுக்கோட்டையைச் சேர்ந்த மதியை(25) திருப்பூர் மதுவிலக்கு போலீசார் கைது செய்து 4 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

0 comments: