Wednesday, January 07, 2015

On Wednesday, January 07, 2015 by Unknown in ,    
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஒன்றியக்குழு சார்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 22–வது வாடிப்பட்டி ஒன்றியமாநாடு சோழவந்தான் தியாகி எஸ்.எஸ்.சுப்பிரமணியன் அரங்கில் நடந்தது.
இந்த மாநாட்டு கூட்டத்திற்கு மாநில நிர்வாககுழு உறுப்பினர் பி.சேதுராமன் தலைமை தாங்கினார். புறநகர் மாவட்டச்செயலாளர் காளிதாஸ், துணைச் செயலாளர் கந்தசாமி, பொருளாளர் எ.எம்.ஜெயக்கொடி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய செயலாளர் மூர்த்தி வரவேற்றார்.
இந்த கூட்டத்தில் ஒன்றியக்குழு நிர்வாகிகள் தேர்தல் நடந்தது. புதிய நிர்வாகிகளாக ஒன்றிய செயலாளர் மூர்த்தி, துணைச் செயலாளர் மாரியப்பன், பொருளாளராக நாகராஜ், ஒன்றியகுழு உறுப்பினர்களாக பரமசிவம், தவமணி, சிவக்குமார், சந்திரன், செல்வராஜ், பொன்னுதாய், பாலமுருகன், ராஜகுமாரி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
இதில் பூரண மதுவிலக்கை அமுல்படுத்தகோரியும், நிறுத்திய முதியோர் உதவிதொகையை உடனே வழங்க கோரியும், நிலத்தடி நீரை உறிஞ்சி விற்கும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், கனிம வளங்களை பாதுகாக்க கோரியும், சோழவந்தான் ரெயில்வே மேம்பால வேலையை உடனே தொடங்க கோரியும், அனைத்து பயிர்களுக்கும் பாதுகாப்பு திட்டத்தை அமுல்படுத்தகோரியும், சோழவந்தான் தொகுதியில் அரசு கலைக்கல்லூரி தொடங்க கோரியும், அலங்காநல்லூர் ஜல்லிக் கட்டு விழாவை அரசு நடைமுறைக்குட்பட்டு நடத்திட வேண்டும், சோழவந்தான் விவசாய பண்ணையில் வெற்றிலை ஆராய்ச்சி மையம் அமைத்து சோழவந்தான் பகுதியில் அழிந்துவரும் வெற்றிலை கொடிக்கால் விவசாயத்தை பாதுகாத்திட வேண்டும் உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது

0 comments: