Wednesday, January 07, 2015

On Wednesday, January 07, 2015 by Unknown in ,    

தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பாக இருந்து நடத்தப்பட்டு வருகிறது .இந்நிலையில் உச்சநீதிமன்றம் கடந்த மே மாதம் ஜல்லிக்கட்டிற்கு தடை விதித்தது .இதனை மறு ஆய்வு செய்திட கோரி தமிழக அரசின் சார்பிலும் ஜல்லிக்கட்டு பேரவை சார்பிலும் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டு இன்னும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை எனவே இதற்கு அவசர சட்டம் இயற்றி தமிழக அரசு அனுமதி வழங்கிடவும் ,வன விலங்கு பட்டியலில் இருந்து காளையை நீக்கவும் ,தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவை சார்பில் மதுரையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மாநில தலைவர் பி ராஜசேகரன் தலைமை வகித்தார் .மதுரை ,சிவகங்கை ,ராமநாதபுரம் ,திண்டுக்கல் ,தேனி,திருச்சி ,தஞ்சை ,சேலம் ,கோவை ,விருதுநகர்  உள்ளிட்ட 17 மாவட்டங்களில் இருந்து வீரர்கள் ஆயிரக் கணக்கில் பங்கேற்றனர் .ஆர்ப்பாட்டத்தில் பேசிய மாநில தலைவர் பி ராஜசேகரன் .மக்கள் முதல்வர் ஜெயலலிதா இந்த விஷயத்தில் தலையிட்டு ஜல்லிக்கட்டை நடத்திட அவசர சட்டம் இயற்ற வேண்டும் என்றும் இந்த தடை நிரந்தரமானதும் அல்ல நிலையானதும் அல்ல என பேசினார் .பின்னர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ஆறுமுக நயினாரிடம் கோரிக்கை மனுவினை அளித்தனர் .மாவட்ட ஆட்சியர் சுப்பிரமணியனிடமும் கோரிக்கையை வலியுறுத்தினர் .உடன் அண்ணாமலை ஹோட்டல் உரிமையாளர் ஜெயராமன் ,சமத்துவ மக்கள் கட்சி கரு .நாகராஜன் ,ஈஸ்வரன் .ஜெயக்குமார் ஆகியோர் இருந்தனர்

0 comments: