Wednesday, January 07, 2015

On Wednesday, January 07, 2015 by Unknown in ,    
வாடிப்பட்டி ஒன்றியத்திலுள்ள 23 ஊராட்சி மற்றும் 73 கிளை அ.தி.மு.க. நிர்வாகிகளுக்கான தேர்தல் சோழவந்தான் அருகேயுள்ள தென்கரை சமுதாயக்கூடத்தில் நடந்தது.
அவை தலைவர், செயலாளர், இணை செயலாளர், துணை செயலாளர், பொருளாளர், மேலவை பிரதிநிதி மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் ஆகிய பதவிகளுக்கு போட்டியிடும் வேட்பாளர்களிடமிருந்து வேட்பு மனுக்கள் பெறப்பட்டது.
இதில் நெல்லை மாவட்ட அவை தலைவர் முன்னாள் எம்.எல்.ஏ அண்ணாமலை மற்றும் ஆலங்குளம் பேரூராட்சி தலைவர் சொக்கலிங்கம், நெல்லை புறநகர் மாவட்ட பேரவை துணை தலைவர் கணேசன் ஆகியோர் தேர்தல் ஆணையாளராக செயல்பட்டனர். ஒவ்வொரு ஊராட்சி மற்றும் கிளை கழகங்களுக்கு 18 பேரிடம் இருந்து விருப்ப மனுக்கள் பெறப்பட்டன.
இதேபோல் சோழவந்தான் பேரூராட்சியில் உள்ள 18 வார்டுகளுக்கான நிர்வாகி தேர்தல் பஜனை மடத்தெருவிலுள்ள திருமண மண்டபத்தில் வேட்பு மனு தாக்கல் நடைபெற்றது. இதில் தற்போதுள்ள நிர்வாகிகளே பெரும்பாலானோர் விருப்ப மனு தாக்கல் செய்தனர். தேர்தல் ஆணையர்களாக பொதுக்குழு உறுப்பினர் அக்பர்ஷா மற்றும் நெல்லை புறநகர் மாவட்ட பாசறை இணை செயலாளர் வெங்கட்ராமன் ஆகியோர் செயல்பட்டனர்.
தேர்தல் நடைபெறும் இடங்களில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் செந்தூர் பாண்டியன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

0 comments: