Wednesday, January 07, 2015
திருப்பூர் மாவட்ட கலெக்டர் ஜி.கோவிந்தராஜ் தலைமையில் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று காலை நடந்தது. கூட்டத்தில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு அடிப்படை வசதி, உதவித்தொகை, ரேஷன் கார்டு, கல்விக்கடன் போன்ற பல்வேறு கோரிக்கைகள் குறித்து மனுக்கள் கொடுத்தனர்.
திருப்பூர் நல்லூர் காசிபாளையம் பகுதி பெண்கள் சுமார் 50–க்கும் மேற்பட்டோர் கொடுத்த மனுவில், சிட்கோ செல்லும் சாலையில் உள்ள தனியார் நிறுவனத்தில் இருந்து கழிவுநீர் முழுவதும் சிட்கோ செல்லும் சாலை திறந்து விடப்படுகிறது. இந்த கழிவுநீர் அந்த சாலை வழியாக ஓடி அருகில் உள்ள பாப்பன்காடு காலனி மற்றும் பள்ளக்காட்டு காலனியில் வசிக்கும் மக்கள் குடிநீர் பயன்பாட்டுக்காக எடுக்கப்படும் கிணற்றின் கரையில் தேங்கி நிற்கிறது. இதனால் கிணற்றில் கழிவுநீர் கலக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று கூறியிருந்தனர்.
திருப்பூர் அணைப்பாளையத்தை சேர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் கொடுத்த மனுவில், அணைப்பாளையம் பகுதியில் நாய்யல் ஆற்றின் குறுக்கே கிடப்பில் கிடக்கும் பாலப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்றும், அப்பகுதியில் கரடுமுரடாக உள்ள சாலையை சீரமைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து இருந்தனர்.
திருப்பூர் மாவட்ட சிவசேனா அமைப்பினர் கொடுத்த மனுவில், திருப்பூர் ரெயில் நிலையம் அருகில் தேவாங்கபுரத்தில் பத்திரகாளியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் முகப்பு வாசல் முன்பகுதியில் வழித்தடத்தை மறைத்து ரெயில்வே துறையினர் சுற்றுச்சுவர் எழுப்பி உள்ளனர். அதே நேரம் கோவிலின் அருகில் உள்ள தனியார் ஓட்டல் நிர்வாகத்தினர் ரெயில்வே அதிகாரிகள் அனுமதியுடன் அந்த சுற்றுச்சுவரை இடித்து வழித்தடம் ஏற்படுத்தி உள்ளனர். ஆனால் ரெயில்வே நிர்வாகம் கோவிலுக்கு வழித்தடம் விட மறுக்கிறது. இதனால் பக்தர்கள் மிகவும் அவதி அடைந்து வருகிறார்கள். எனவே அந்த தடுப்பு சுவரை முழுமையாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.
நல்லூர் நுகர்வோர் நல மன்றத்தினர் கொடுத்த மனுவில், திருப்பூர் மாநகரில் உள்ள ஓட்டல்கள், தள்ளுவண்டி கடைகளில் சுகாதாரமற்ற முறையில் உணவுப்பொருட்கள் தயாரித்து அதிக விலைக்கு விற்பனை செய்கிறார்கள். எனவே இதுகுறித்து உரிய ஆய்வு நடத்தி சம்பந்தப்பட்ட உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது. தமிழ்நாடு தியாகி குமரன் பொது தொழிலாளர் சங்கத்தினர் கொடுத்த மனுவில், அரசு அறிவித்துள்ள இலவச பொருட்கள் மக்களுக்கு முறையாக வழங்கப்படுவதில்லை என்றும், ஆயிரத்துக்கும் அதிகமான கார்டுகள் உள்ள ஒரு ரேஷன் கடைக்கு 500 முதல் 700 இலவச வேட்டி–சேலைகள் தான் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன என்றும் புகார் கூறியிருந்தனர்.
ஆம்ஆத்மி கட்சியினர் கொடுத்த புகார் மனுவில் தொட்டிபாளையம் கிராம நிர்வாக அலுவகத்தில் சான்றிதழ், கையொப்பம் போன்றவை வாங்க லஞ்சம் வாங்குவதாகவும், இதுகுறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும் கூறியிருந்தனர். இந்து மக்கள் கட்சி–(தமிழகம்) கொடுத்த மனுவில், பகவத்கீதை, திருக்குறள் ஆகியவற்றை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும். ஏழை அய்யப்ப பக்தர்களுக்கு பஸ், ரெயில் கட்டணத்தில் சலுகை வழங்க வேண்டும், சபரிமலையில் தமிழக அரசு சார்பில் தங்கும் மடம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து இருந்தனர். அதுபோல் பாரத் மக்கள் கட்சி கொடுத்த மனுவில், சாலையோரங்களில் உள்ள மரங்களில் ஆணி அடிப்பதை தடை செய்ய வேண்டும் என்றும் இதனால் அதன் ஆயுட்காலம் குறைகிறது என்றும் கூறியிருந்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
ஈரோட்டில் 80 கடைகளில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நடத்திய திடீர் சோதனையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்க...
-
அரசு மேல்நிலைப் பள்ளி கண்ணுடையான் பட்டியில் பயிலும் மாணவர்களுக்கு 1 லட்சம் ௹பாய மதிப்பிலான அரிசி மற்றும் மளிகைப் பொருட்கள் அப்பள்ளி...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.சார்பில், கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வேண்டி காலேஜ் ரோட்டில் ...
-
திருப்பூர் காங்கயம் ரோடு செயின்ட் ஜோசப் பெண்கள் கல்லூரியில் நிர்வாகவியல் துறை சார்பில் விற்பனை கண்காட்சி நடைபெற்றது. கல்லூரி முதல்வர் சவுரி...
-
Sir / Madam, The Kargil Vijay Diwas was celebrated on 26.07.2014 at 9.00 a.m. at the Kargil War Memorial on the Beach Roa...
-
சமயபுரம் மாரியம்மன் கோவில் திருத்தல வரலாறு கண்ணனூர், கண்ணபுரம், விக்ரமபுரம், மாகாளிபுரம் என்றெல்லாம் அழைக்கப்படும் சமயபுரம் ஸ்ரீமா...
-
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கம் சார்பில் 18- ஆண்டுகளாக தொகுப்பு ஊதியத்தில் பணியாற்றும்27ஆயி...
0 comments:
Post a Comment