Monday, January 12, 2015

On Monday, January 12, 2015 by farook press in ,    
திருப்பூரில் டெங்கு காய்ச்சல் மற்றும் நோய் தொற்று பரவாமல் தடுக்க மாநகராட்சி மற்றும் சுகாதாரத் துறை துரித நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி(மார்க்சிஸ்ட்வலியுறுத்திக் கேட்டுக் கொண்டுள்ளது.
இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்டக்குழுச் செயலாளர் கே.காமராஜ் சனியன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
திருப்பூரில் டெங்கு காய்ச்சல் தாக்குதலால் வயது பெண் குழந்தை இறந்ததாக செய்தி வெளிவந்துள்ளதுஅதேபோல் வெள்ளியன்று இரவு கோல்டன் நகர் பகுதியைச் சேர்ந்த 2 வயது பெண் குழந்தை உயிரிழந்துள்ளதுஇந்த இரு குழந்தைகள் உயிரிழந்திருப்பதும் மாநகராட்சி 23வது வார்டுக்கு உட்பட்ட பகுதியாகும்.
இது தவிர சூரியா காலனி பகுதியைச் சேர்ந்த ஒரு குழந்தைக்கு இது போல் நோய்த் தாக்குதலில் ஒரு கண் பார்வை இழப்பு ஏற்பட்டிருக்கிறதுமேலும் திருப்பூரைச் சேர்ந்த சில குழந்தைகள் காய்ச்சல் காரணமாக கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்ற தகவலும் வெளிவந்துள்ளது.
எனவே திருப்பூரில் டெங்கு காய்ச்சல் மற்றும் தொற்று நோய்கள் ஏற்படாமல் தடுக்க மாநகராட்சி நிர்வாகம் சுகாதாரத் துறையுடன் இணைந்து துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.குறிப்பாக மாநகரின் பல்வேறு பகுதிகளில் சுத்தப்படுத்தாமல் பல நாட்களாக தேங்கியிருக்கும் சாக்கடை கழிவு நீரும்,அள்ளப்படாமல் குவிந்து கிடக்கும் குப்பை கூளங்களும் கொசுக்கள்பூச்சிகள் உற்பத்திக்கு மூலகாரணமாக இருக்கின்றன.
எனவே மாநகர் முழுவதும் சாக்கடை கால்வாய்களை தொடர்ச்சியாக சுத்தப்படுத்துவதுடன்ஆங்காங்கே தேங்கியுள்ள கழிவுநீர் குட்டைகளையும் முழுமையாக சுத்தப்படுத்தி மருந்து தெளிக்க வேண்டும்குப்பைகள் தேங்காதபடி உடனுக்குடன் அப்புறப்படுத்த வேண்டும்மக்களுக்கு விநியோகம் செய்யும் குடிநீர் தூய்மையாக இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும்.இத்தகைய தூய்மை நடவடிக்கைகள் மூலம் கொசுக்கள்பூச்சிகள் உற்பத்தியாவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காய்ச்சல்நோய்த் தொற்று காரணமாக குழந்தைகள் அதிக அளவில் பாதிக்கப்படும் பகுதிகள் குறித்து சுகாதாரத் துறை மூலம் தொடர் கண்காணிப்பு நடவடிக்கை மேற்கொள்வதுடன்சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தி தேவையான மருந்துகள் வழங்க வேண்டும்.
குறிப்பாக உழைக்கும் மக்கள் பெருமளவு வசிக்கும் மாநகரின் புறநகர் பகுதி உள்ளிட்ட விரிவடையும் பகுதிகள்,ஒருங்கிணைக்கப்பட்ட உள்ளாட்சி பகுதிகளில் தூய்மையான குடிநீர் விநியோகம்சாக்கடை அள்ளுவதுகுப்பைகளை அகற்றுவது உள்ளிட்ட பணிகளில் பெரிய அளவுக்குத் தேக்கம் உள்ளதுஇத்தகைய பகுதிகள் தான் அடிக்கடி நோய்த் தொற்றுக்கு உள்ளாகின்றன. எனவே மாநகராட்சி மற்றும் சுகாதாரத்துறை இந்த பகுதிகள் குறித்து சிறப்பு கவனம் செலுத்துவதுடன் ஒட்டுமொத்தமாக நோய்த் தாக்குதலை தவிர்க்கவும்,கட்டுப்படுத்தவும் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் முழுமையாக மேற்கொள்ள வேண்டும்.
அத்துடன் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு திருப்பூர் மாவட்ட அரசுத் தலைமை மருத்துவமனையில் சிகிச்சை அளிப்பதற்கு உரிய ஏற்பாடு இல்லாததால்அவர்களை கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பும் நிலை உள்ளதுஎனவே திருப்பூர் மாவட்ட அரசுத் தலைமை மருத்துவமனையிலேயே டெங்கு காய்ச்சல் நோய்க்கு உரிய மருத்துவ வசதிமருந்துகள் மற்றும் தேவையான மருத்துவர்கள் பணியாற்றவும் தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்டக்குழு சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்வதாக கே.காமராஜ் கூறியுள்ளார்.

0 comments: