Friday, January 09, 2015

On Friday, January 09, 2015 by Unknown in ,    
புதிய கம்பெனி சட்டத்தின்கீழ் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு கம்பெனி செயலர்கள் தங்களைத் தயார்ப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று இந்திய கம்பெனி செயலர்கள் சங்கத்தின் தலைவர் ஆர்.ஸ்ரீதரன் வலியுறுத்தினார்.
இந்திய கம்பெனி செயலர்கள் சங்கத்தின் மதுரை கிளை சார்பில் கம்பெனி சட்டம் 2013 என்ற கருத்தரங்கைத் தொடங்கி வைத்து அவர் பேசியது:
புதிய கம்பெனி சட்டம் கம்பெனி செயலர்களுக்கு அதிக முக்கியத்துவத்தையும், அதிக பொறுப்புகளையும் அளித்திருக்கிறது. ஆகவே, அதற்கேற்ப கம்பெனி செயலர்கள் தங்களைத் தயார்ப்படுத்திக் கொள்ள வேண்டும்.
1956 முதல் 2013 வரையிலான கம்பெனி சட்டத்தில் பல திருத்தங்கள் செய்யப்பட்டிருக்கின்றன. ஏற்கெனவே இருந்த சட்டம் எளிமைப்படுத்தப்பட்டு புதிய சட்டம் கொண்டு வரப்பட்டிருக்கிறது. இருப்பினும் ஏற்கெனவே இருந்ததைக் காட்டிலும் பல பிரிவுகள் கூடுதலாகச் சேர்க்கப்பட்டிருக்கின்றன. ஆகவே, அந்த பிரிவுகள் அனைத்தையும் அறிந்து வைத்திருக்க வேண்டும்.
நிறுவனங்களின் நிதி சம்பந்தப்பட்ட பட்டியல்கள் தயாரிப்பு, ஒப்பந்தம், செலவினம் போன்ற விஷயங்களில் கம்பெனி செயலர்களுக்கு முக்கியப்பங்கு இருக்கிறது. அதிலும் புதிய கம்பெனி சட்டம் கூடுதல் பொறுப்புகளை அளித்துள்ளது. கம்பெனி சட்டத்தின்கீழ் பதிவு செய்யப்படும் நிறுவனங்கள் அதிகரித்து வருகின்றன.
இச்சூழலில் கம்பெனி செயலர்களின் தேவையும் அதிகமாக உள்ளது.
ஆகவே, இத்தகைய நிறுவனங்களுக்குச் சிறந்த வழிகாட்டிகளாக கம்பெனி செயலர்கள் செயல்பட வேண்டும் என்றார்.
இந்தி/ கம்பெனி செயலர்கள் சங்கத்தின் செயல் தலைவர் சுதானு சின்ஹா, மதுரை கிளை தலைவர் எஸ்.பரமசிவன், செயலர் ஏ.வி.இந்திரன் உள்ளிட்டோர் பேசினர்.

0 comments: