Sunday, January 04, 2015

On Sunday, January 04, 2015 by farook press in ,    
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.மற்றும் வழக்கறிஞர் அணி சார்பில் கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா, வழக்கில் இருந்து முழுமையாக விடுதலையாகி தமிழக முதல்வராக மீண்டும் பதவி ஏற்க வேண்டி திருப்பூர் அடுத்துள்ள பெருந்தொழுவு அருள்மிகு ஸ்ரீ முத்துக்குமார தண்டாயுதபாணி திருக்கோவிலில் அபிஷேக அலங்கார பூஜை மற்றும் சிறப்பு வழிபாடு மாநகர் மாவட்ட வழக்கறிஞர் அணி பிரிவு செயலாளர் கே.என்.சுப்பிரமணியம் தலைமையில் நடைபெற்றது. மகளிர் அணி மாநில  துணை செயலாளரும், மேயருமான அ.விசாலாட்சி, மாவட்ட இளைஞர் அணி செயலாளரும், துணை மேயருமான சு.குணசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த சிறப்பு பூஜையில் விக்னேஸ்வரா பூஜை, பஜ்சகவியா பூஜை, புண்ணியஜனம், கணபதி ஹோமம், நவக்கிரஹ ஹோமம், சுதர்சன ஹோமம், ஆயுசு ஹோமம், பூர்ணசகி ஆகிய பூஜைகள் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் பல்லடம் கே.பி.பரமசிவம் எம்.எல்.ஏ., மாவட்ட ஊராட்சி தலைவர் எம்.சண்முகம், பொங்கலூர் ஒன்றியகுழு தலைவர் சிவாச்சலம், மாநகர் மாவட்ட நிர்வாகிகள் ஜெ.ஆர்.ஜான், வி.ராதாகிருஷ்ணன், கண்ணப்பன், மார்க்கெட் சக்திவேல், கரைபுதூர் நடராஜன், யு.எஸ்.பழனிச்சாமி, புத்தரச்சல் பாபு, அவினாசி ஜெகதாம்பாள், கொடுவாய் லோகநாதன், பல்லடம் நகராட்சி துணை தலைவர் வைஸ் பி.கே.பழனிசாமி, மாவட்ட கவுன்சிலர் பழனிச்சாமி, தம்பி  மனோகரன், அட்லஸ்  லோகநாதன், உஷா ரவிக்குமார், எஸ்பி.என்.பழனிசாமி, அய்யாசாமி,கிருத்திகா சோமசுந்தரம் கருணாகரன்,கோமதி சம்பத், சாகுல் ஹமீது, தனபால், தஹ்ங்கமுத்து, ஏ.கண்ணப்பன், ராஜ்குமார், மணிகண்டன், யுவராஜ் சரவணன், சடையப்பன், நீதிராஜன், கவுன்சிலர்கள் சண்முகம்,பேபி தர்மலிங்கம்,ஆகியோர்  உள்ளிட்ட  மாமன்ற உறுப்பினர்கள், கிரிதரன், அர்ஜுனன் மற்றும் வழக்கறிஞர் அணி நிர்வாகிகள்  வெள்ளியங்கிரி, தங்கவேல் ஆகியோர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் மலை அடிவாரத்தில் உள்ள ஆறுபடை வீடுகளில் சிறப்பு வழிபாடு நடை பெற்றது. இன் தா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மற்றும் பொதுமக்களுக்கு முடிவில் அன்னதானம் வழங்கபட்டது.

0 comments: