Sunday, January 04, 2015

On Sunday, January 04, 2015 by farook press in ,    
தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா வேட்டி சேலை வழங்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக திருப்பூர் வடக்கு ஒன்றிய பகுதியிகளில் உள்ள பெருமாநல்லூர், காளிபாளையம், ஈட்டிவீரம்பாளையம், வள்ளிபுரம் உள்ளிட்ட  8 ஊராட்சிக்கு உட்பட்ட நியாய விலைக்கடைகளில் பொங்கல் பண்டிகை விலையில்லா வேஷ்டி,சேலை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.காளிபாளையம் ஊராட்சி அலுவலகத்தில் நடந்த விழாவிற்கு தலைவர் பொன்னுலிங்கம் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் பாலசுப்பிரமணியம் முன்னிலை வகித்தார். வருவாய் ஆய்வாளர் தமிலீஸ்வரன் வரவேற்று பேசினார். விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ஒன்றியகுழு பெருந்தலைவர் ஆர்.சாமிநாதன் பயனாளிகளுக்கு வேஷ்டி,சேலைகளை வழங்கி சிறப்புரையாறினார். 
   இதே போல் மற்ற ஊராட்சிகளுக்கும் சென்று சுமார் 7 ஆயிரம் பயனாளிகளுக்கு விலையில்லா வேஷ்டி, சேலை வழங்கினார். விழாவில் ஸ்ரீதேவி பழனிசாமி உள்ளிட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள் ஒன்றிய குழு உறுப்பினர் சித்ரா பழனிசாமி, கூட்டுறவு கடன் சங்க துணைத்தலைவர்கள் அய்யாசாமி, குமாரவேல், செயலாளர் பழனிசாமி, வார்டு உறுப்பினர்கள், அண்ணா தி.மு.க.நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். முடிவில் காளிபாளையம் கிராம நிர்வாக அலுவலர் ராஜா, நன்றி கூறினார்.

0 comments: