Monday, January 05, 2015
நள்ளிரவு நேரத்தில் மர்மமான முறையில் திடீரென வேன் தீப்பிடித்து எரிந்த சம்பவம் குறித்து உடுமலை போலீஸார் விசாரிக்கின்றனர்.
உடுமலை குமரன் நகரில் வசித்து வருபவர் பாலமுரளிகிருஷ்ணன் (37). தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவருக்கு சொந்தமாக வேன் உள்ளது. இந்நிலையில், சனிக்கிழமை இரவு வீட்டின் முன்பு, வேன்னை நிறுத்தி விட்டு பாலமுரளிகிருஷ்ணன் தூங்கச் சென்றாராம். நள்ளிரவு 3 மணி அளவில் திடீரென பலத்த சத்தம் கேட்டு, அவர் வீட்டுக்கு வெளியே வந்து பார்த்தபோது, வேன் தீப்பற்றி எரிந்து கொண்டிருப்பதைக் கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார்.
அங்கு கூடிய அப்பகுதி மக்கள், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இருப்பினும் அந்த வேன் முற்றிலும் எரிந்து நாசமானது.
இது குறித்து போலீஸார் கூறியது:
வெடிச் சத்தம் கேட்டதாக அப்பகுதி பொதுமக்கள் கூறியுள்ளனர். வேன் உரிமையாளர் பாலமுரளிகிருஷ்ணாவிற்கு அண்மைக்காலமாக ஒரு சில மர்ம நபர்கள் கொலை மிரட்டல் விடுத்து வருவதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. அவர் வீட்டின் முன்பு உள்ள சிசிடிவி கண்காணிப்புக் கேமிராவில் மர்ம நபர்கள் நடமாட்டம் பதிவாகி உள்ளதா என ஆய்வு செய்து வருவதாகவும், பொதுமக்கள் அச்சப்பட வேண்டியதில்லை எனவும் போலீஸார் தெரிவித்துள்ளனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரையில் தமிழ்நாடு நாடக நடிகர் சங்கம் சார்பில் சங்கரதாஸ் சுவாமிகள் குருபூஜை நிகழ்ச்சி சங்கத் தலைவர் மோகன் தலைமையில் நடந்தது. நிர்வாகிகள் ...
-
கர்நாடக இசைக்கலைஞர் மாண்டலின் சீனிவாஸ் மறைவுக்கு, முதல்-அமைச்சர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், அவர் விட்டுச்சென்ற இடத்தை இனி யா...
-
LnDr J Ganesh முகநூல் செய்தி. QUIZ COMPETITION among college and school students on EYE DONATION AWARENESS on the eve of 30 th National Eye...
-
Hollywood star Richard Gere on Monday met Prime Minister Narendra Modi in New Delhi on Monday. Gere is also chairman of Gere Foundatio...
-
பாரதி புத்தகாலயம், பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 12வது திருப்பூர் புத்தகத் திருவிழா வெள்ளியன்று சிறப்பாகத் தொடங்கியது. திருப்பூர...
-
அத்துமீறி அண்ணன் வீட்டுக்குள் புகுந்த வாலிபரை தட்டிக்கேட்ட தம்பியை கத்தியால் குத்தி கொலை. திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள முள்ளா...
-
தமிழகத்தில் பெயிண்ட் மற்றும் ஓவிய தொழில் பார்ப்பவர்களுக்கு தனி நல வாரியம் அமைத்து தர வேண்டும் என தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில...
-
சிவன்மலை கோயிலில் பக்தர்கள் பயன்படுத்தி வரும் யானைத்தடம் பாதை தற்போது மூடப்பட்டுள்ளது. இதை திறந்து விட வேண்டும் என பக்தர்கள் வேண்டுகோள் வி...
0 comments:
Post a Comment