Thursday, January 01, 2015

On Thursday, January 01, 2015 by Unknown in ,    
ஹாலிவுட் திரையுலகில் சிறந்த நடிகைக்கான வருடாந்திர ஆஸ்கார் விருதை இரண்டு ஆண்டுகள் தொடர்ச்சியாகப் பெற்ற மூத்த ஹாலிவுட் நட்சத்திரம் லூயிஸ் ரெய்னர் லண்டனில் காலமானார். அவருக்கு வயது 104.

இரண்டு ஆஸ்கர்களை தொடர்ந்து வென்ற நடிகை மரணம்


ஆஸ்த்ரிய நாட்டின் தலைநராக வியன்னாவில் பிறந்த லூயிஸ் அம்மையார் தமது வாழ்வின் பெரும்பகுதியை லண்டனிலேயே கழித்தார். கிரேட் ஜிக்பீல்ட் (GREAT ZIGFIELD) என்ற படத்தின் நாயகியாக 1936ஆம் ஆண்டிலும், குட் எர்த்(GOOD EARTH) என்ற படத்தின் நாயகியாக 1937ஆம் ஆண்டிலும் நடித்து தொடர்ச்சியாக சிறந்த நடிகைக்கான ஆஸ்கார் விருதை அவர் பெற்றார்.
 
ஹாலிவுட்டின் எம் ஜி எம் படத் தயாரிப்பு நிறுவனத்தினர் இவரை அடையாளம் காணும்வரை அவர் ஜெர்மானிய மொழிப் படங்களில் நடித்துக் கொண்டிருந்தார்.
 
ஹாலிவுட்டுக்கு வந்த பின்னர் 1984 ஆம் ஆண்டு தி லவ் போட் (The Loveboat) என்ற அமெரிக்கச் சின்னத்திரைத் தொடரில் நடித்த லூயிஸ் அம்மையார், 1998ஆம் ஆண்டு பிரபலங்களாக இருந்த மைக்கேல் கேம்போன், டாமினிக் வெஸ்ட் ஆகியோருடன் தி கேம்ப்ளர் (The Gambler) என்ற படத்திலும் நடத்திருந்தார்.
 
இவரைப் போல ஹாலிவுட் நட்சத்திரங்கள் நால்வர் மட்டுமே அடுத்தடுத்த ஆண்டுகள் தொடர்ந்து ஆஸ்கார் விருதுகளைப் பெற்றுள்ளனர்

0 comments: