Monday, March 09, 2015

On Monday, March 09, 2015 by farook press in ,    
வீரபாண்டி,திருப்பூர் அருகே குடும்ப தகராறில் அண்ணணை அடித்து கொன்ற 3 தம்பிகளை போலீசார் கைது செய்தனர்.இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவதுதகராறுதிருப்பூரை அடுத்த மங்கலம் சின்னவர் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் அப்துல் அலிகான் (வயது 42). இவருடைய மனைவி மதினா பேகம் (40). கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் முடிந்த இவர்களுக்கு இதுவரை குழந்தை இல்லை என்று கூறப்படுகிறது. மேலும் அப்துல் அலிகானுக்கு குடிப்பழக்கம் இருந்ததாக தெரிகிறது. இதனால் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.இந்த நிலையில் நேற்று அதிகாலை மீண்டும் அப்துல் அலிகானுக்கும், அவருடைய மனைவிக்கும் சண்டை ஏற்பட்டுள்ளது.இரும்பு கம்பியால்தாக்குதல்இதைத்தொடர்ந்து அதே பகுதியில் வசிக்கும் அப்துல் அலிகானின் தம்பிகளான இப்ராகிம் (40), அன்வர்பாதுஷா (30) மற்றும் ஒசூர்கான் (27) ஆகிய 3 பேரும் சேர்ந்து அப்துல் அலிகானிடம் அவருடைய மனைவியிடம் சண்டை போட்டது தொடர்பாக தட்டி கேட்டுள்ளனர்.அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த அந்த 3 பேரும் சேர்ந்து அப்துல் அலிகானை அங்கு கிடந்த இரும்பு கம்பியால் தாக்கி உள்ளனர்.
இதில் படுகாயமடைந்த அவர் இதுகுறித்து மங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். பின்னர் அவர் சிகிச்சை பெறுவதற்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று கொண்டிருந்தார். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து மங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்துல் அலிகானின் தம்பிகளான இப்ராகிம், அன்வர் பாதுஷா மற்றும் ஒசூர்கான் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். பின்னர் அவர்கள் திருப்பூர் ஜே.எம்.2 கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். திருப்பூர் அருகே குடும்ப தகராறில் அண்ணணை 3 தம்பிகள் சேர்ந்து அடித்து கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

0 comments: