Monday, March 09, 2015

On Monday, March 09, 2015 by farook press in ,    
வெள்ளகோவில் அண்ணாநகர் 2–வது வீதியில் வசிப்பவர் மணிகண்டன் (வயது 35). நகைபட்டறை தொழிலாளி. இந்தநிலையில் நேற்றுமுன்தினம் மணிகண்டன் வீட்டை பூட்டி விட்டு தனது குடும்பத்துடன் நாமக்கல்லில் உள்ள உறவினர் ஒருவரின் வீட்டிற்கு சென்றார். பின்னர் அவர்கள் நேற்று வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
மேலும் பீரோவில் வைக்கப்பட்டு இருந்த 4½ பவுன் தங்க நகை, 1¼ பவுன் தங்கதோடு ஆகியவை திருட்டு போனது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.81 ஆயிரத்து 750 ஆகும். இதுகுறித்து மணிகண்டன் வெள்ளகோவில் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் பால்ராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

0 comments: