Saturday, March 07, 2015

On Saturday, March 07, 2015 by farook press in ,    
திருப்பூர் மாநகராட்சி பகுதியில் ரூ.36 கோடியே 61 லட்சம் மதிப்பில் வளர்ச்சிப்பணிகள் மேற்கொள்வதற்காக பூமிபூஜையை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் நேற்று தொடங்கிவைத்தார்.
திருப்பூர் மாநகராட்சிக்கு தமிழ்நாடு நகர்புற சாலை உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.9 கோடி மானியமாக வழங்கப்பட்டது. இதன் மூலம் ரூ.15 கோடியே 58 லட்சத்துக்கு 60 பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதுபோல் இயக்குதலும் பராமரிப்பு இடைவெளி நிரப்பு திட்டத்தின் கீழ் மழைநீர் வடிகால் கட்ட ரூ.7 கோடி மானியம் ஒதுக்கப்பட்டதில் ரூ.7 கோடியே 31 லட்சம் மதிப்பில் 24 பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.மேலும் ஓடைகளின் குறுக்கே பாலங்கள் கட்ட ரூ.9 கோடி மானியம் வழங்கப்பட்டது. இதன்மூலம் ரூ.9 கோடியே 69 லட்சம் மதிப்பில் 10 இடங்களில் பாலங்கள் கட்டப்பட உள்ளன. இதுதவிர நகர் மற்றும் ஊரமைப்பு துறை மூலம் உள்கட்டமைப்பு மற்றும் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் ரூ.4 கோடியே 3 லட்சம் மதிப்பில் குமார்நகர்– அவினாசி ரோடு சந்திப்பு, ரெயில்நிலையம்– புஷ்பாதியேட்டர் சந்திப்பு, ராக்கியாபாளையம் பிரிவு– காங்கயம் ரோடு சந்திப்பு, மாநகராட்சி அலுவலக சாலை– மங்கலம் ரோடு சந்திப்பு, தாராபுரம் ரோடு– காங்கயம் ரோடு சந்திப்பு, ரெயில்நிலையம்– டவுன்ஹால் சந்திப்பு ஆகிய 6 இடங்களில் உயர்மட்ட நடைமேம்பாலங்கள் அமைக்கப்பட உள்ளன.
அதன்படி மொத்தம் ரூ.36 கோடியே 61 லட்சம் மதிப்பில் பல்வேறு வளர்ச்சிப்பணிகள் மேற்கொள்வதற்கான பூமிபூஜை நிகழ்ச்சி நேற்று மாநகரின் பல்வேறு இடங்களில் நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் ஜி.கோவிந்தராஜ் தலைமை தாங்கினார். மேயர் விசாலாட்சி, துணைமேயர் குணசேகரன், மாநகராட்சி ஆணையாளர் அசோகன் ஆகியோர் முன்னிலைவகித்தனர். வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் பூமிபூஜைகளை தொடங்கிவைத்தார்.
நிகழ்ச்சிகளில் மண்டல தலைவர்கள் ராதாகிருஷ்ணன், ஜான், முத்துசாமி, கிருத்திகா சோமசுந்தரம், கவுன்சிலர்கள் முருகசாமி, கீதா ஆறுமுகம், பி.கே.முத்து, விஜயகுமார், சண்முகசுந்தரம், கேபிள்சிவா, ஆனந்தன், மாநகர பொறியாளர் ரவி, செயற்பொறியாளர்கள் தமிழ்செல்வன், திருமுருகன் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

0 comments: