Thursday, March 12, 2015
திருப்பூர் மாவட்டம், பல்லடம் அடுத்துள்ள பொங்கலூர் ஒன்றியம் கேத்தனூரில் ஊராட்சி மன்ற தலைவர் ஹரிகோபால் ஏற்பாட்டின் பேரில் கோவிலில் சிறப்பு பூஜை மற்றும் 5 ஆயிரம் பேருக்கு சிறப்பு அன்ன தானம் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு தொகுதி எம்.எல்.ஏ., வும், ஒன்றிய செயலாளருமான கே.பி.பரமசிவம், பொங்கலூர் ஒன்றிய செயலாளரும், ஒன்றியக்குழு தலைவருமான எஸ்.சிவாச்சலம் ஆகியோர் தலைமை தங்கினர். பின்னர் அங்குள்ள பெருமாள் கோவிலில் அண்ணா தி.மு.க.பொதுச்செயலாளர் ஜெயலலி தா நீடூழி வாழவும், மீண்டும் தமிழக முதல்வராக பெறுப்பெற்கவும் வேண்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. நிகழ்ச்சியில் மா நகர் மாவட்ட செயலாளரும்,வனத்துறை அமைச்சருமான எம்.எஸ்.எம்.ஆனந்தன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பு பூஜைகளை நடத்தி வைத்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் (அறுசுவை விருந்து) வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி தலைவர் எம்.சண்முகம், ஒன்றிய குழு துணை தலைவர் கோபாலகிருஷ்ணன், ஒன்றிய கவுன்சிலர்கள் ஜெயச்சுந்தர்,அனந்தகிருஷ்ணன், துணை தலைவர் பொன்னுசாமி, நாச்சிபாளையம் ஊராட்சி தலைவர் அப்புசாமி, திருப்பூர் நிலவள வங்கி தலைவர் புத்தரச்சல் பாபு, துத்தேரிபாளையம் கூட்டு றவு சங்க தலைவர் நாகராஜன்,ஒன்றிய மகளிர் அணி செயலாளர் ஜோதிமணி, கிளை நிர்வாகிகள் மகேஷ்குமார், சந்தோஷ், ரங்கராஜ் உள்ளிட்டவர்களும், கேத்தனூர் ஊராட்சி அண்ணா தி.மு.க.சார்பு அணி நிர்வாகிகள் மற்றும் உள்ளாட்சி மன்ற, கூட்டுறவு சங்க பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
ஈரோட்டில் 80 கடைகளில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நடத்திய திடீர் சோதனையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்க...
-
மாவட்டத் தலைநகரமாக உயர்ந்துள்ள திருப்பூரில் அரசு மருத்துவக் கல்லூரி தொடங்குவதுடன், மாவட்ட அரசுத் தலைமை மருத்துவமனையை பன்னோக்கு சிறப்பு (மல...
-
திருச்சியில் அதிமுக சார்பில் மக்களின் முதல்வர் ஜெயலலிதா 67 பிறந்த நாளை முன்னிட்டும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் கருமண்டபத்தில...
-
அரசு மேல்நிலைப் பள்ளி கண்ணுடையான் பட்டியில் பயிலும் மாணவர்களுக்கு 1 லட்சம் ௹பாய மதிப்பிலான அரிசி மற்றும் மளிகைப் பொருட்கள் அப்பள்ளி...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.சார்பில், கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வேண்டி காலேஜ் ரோட்டில் ...
-
திருப்பூர் காங்கயம் ரோடு செயின்ட் ஜோசப் பெண்கள் கல்லூரியில் நிர்வாகவியல் துறை சார்பில் விற்பனை கண்காட்சி நடைபெற்றது. கல்லூரி முதல்வர் சவுரி...
0 comments:
Post a Comment