Wednesday, March 04, 2015

On Wednesday, March 04, 2015 by Unknown in ,    
நித்தியானந்தாவின் ஒழுக்கமற்ற நடவடிக்கையால் மடத்தில் இருந்து வெளியேற்றினேன்: கோர்ட்டில் மதுரை ஆதீனம் விளக்கம்
நித்தியானந்தாவின் ஒழுக்கமற்ற நடவடிக்கை களால் மடத்தில் இருந்து வெளியேற்றினேன் என்று மதுரை ஆதீனம் கோர்ட்டில் பரபரப்பு விளக்கம் கொடுத்துள் ளார்.
மதுரை ஆதீனத்தின் இளைய மடாதிபதியாக கடந்த 2012–ம் ஆண்டு நித்தியானந்தா நியமிக்கப் பட்டார். இதை எதிர்த்து சென்னையை சேர்ந்த மணிவாசகம், கும்பகோணம் தியாகராஜன் ஆகியோர் மதுரை 1வது கூடுதல் செசன்சு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று மதுரை ஆதீனம் (அருணகிரிநாதர்), நித்தியானந்தா ஆகியோர் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்குகள் நிலுவை யில் இருந்தபோது மதுரை ஆதீனத்தின் இளைய மடாதிபதி பதவியில் இருந்து நித்தியானந்தாவை நீக்கி விட்டதாக மதுரை ஆதீனம் அறிவித்தார். மேலும் இது தொடர்பான வழக்கை தொடர தனக்கு விருப்பம் இல்லை என்றும் அவர் கோர்ட்டில் தெரிவித்தார்.
இந்த வழக்கின் விசாரணையின் போது நித்தியானந்தா தன்னை மதுரை ஆதீனமடத்தின் 293–வது மடாதிபதியாக குறிப்பிட்டு ஒரு மனுவை தாக்கல் செய்தார். அதில், “எனக்கும், அருணகிரி நாதருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், இருவரும் தனித்தனியாக வழக்கை சந்தித்து வரு கிறோம். வழக்கில் நான் பாதிக்கப்பட்டவன்.
எனவே வழக்கை தொடர்ந்து நடத்த விரும்பு கிறேன். எனவே இந்த வழக் கில் அருணகிரிநாதரை 3–வது எதிர்மனுதாரராக சேர்த்து, வழக்கை தொடர்ந்து நடத்த அனுமதிக்க வேண்டும்“ என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கின் விசா ரணை நீதிபதி இளவழகன் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் சார்பில் தாக்கல் செய்யப் பட்ட பதில் மனுவில் கூறி யிருப்பதாவது:–
இந்த வழக்கின் மனு தாரர்களால் மதுரை ஆதீனத்தை எதிர்த்து வழக்கு தாக்கல் செய்யமுடியாது. பாரம்பரியமிக்க மடத்தின் ஆதீனமாக இருப்பதால் சமயத்தை பரப்பவும், பூஜைகள் செய்யவும், மடத்தின் பிரதிநிதிகள், அடுத்த மடாதிபதி ஆகியோரை நியமனம் செய்யவும் ஆதீனத்திற்கு முழு அதிகாரம் உண்டு. மடத்தில் தங்கி பூஜைகள் செய்யும் தம்பிரான் இளைய ஆதீனமாக உயர்த்தப்பட தகுதியானவர். வெளி நபர் மற்றும் சைவ சமயத்தை சாராதவர்கள் தம்பிரானாக இருக்கத் தகுதியற்றவர்கள்.
ஆனால், நித்யானந்தா தம்பிரான் அல்ல. அவர் மதுரை ஆதீனத்தின் பக்தர் அல்ல. அவர், நித்யானந்தா தீயான பீடத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்.
நித்யானந்தா என்னிடம் ஆசி பெறவும், திருஞான சம்பந்தர் பற்றி தெரிந்து கொள்ளவும் தான் மடத்துக்கு வந்தார்.
ஆதீன மடத்தின் தத்துவம், கொள்கையை அவரால் ஏற்க முடியவில்லை. இங்கு தங்கியிருந்த சில நாட்களில் பாரம்பரியமான மதுரை ஆதீனத்தின் பெயரை கெடுக்க முயன்றார். ஆதீன தத்துவத்துக்கு எதிராக செயல்பட்டார். இயற்கைக்கு மாறான நடவடிக்கைகளில் ஈடுபட்டார். மடத்தில் தங்காதது, ஆதீனத்தின் அனுமதியின்றி வெளியே சென்றது, தலையை மொட்டையடிக்காதது போன்ற காரியங்களை உற்று கவனித்து வந்தேன். அவரது நடவடிக்கைகள் ஆதீனத்திற்கு இணையாக வும், அதைவிட மேலானதாக வும் இருந்தன.
ஆதீனத்திற்கு இணையாக உட்கார்ந்தார். அவர் தன்னை கடவுளாக கூறிக்கொண்டு மடத்தில் பூஜைகள் நடை பெறுவதை வெறுத்தார். தன்னைத்தானே 293வது ஆதீனமாக அறிவிக்கத் தொடங்கினார். இந்த சூழலில் நித்யானந்தா மீது பல்வேறு பாலியல் வழக்குகள் இருப்பது தெரியவந்தது. நித்யானந்தாவின் ஒழுக்க மற்ற, சட்ட விரோத காரியங் களை பார்த்த பின்னர் கண்காணிப்பிலிருந்து என்னை விலக்கிக் கொண் டேன். பின்னர் கடந்த 19.10.2012 அன்று அவரை மடத்திலிருந்து வெளியேற்றி னேன்.
அவர் மடத்தில் தங்கி இருந்த குறைவான நாட் களிலேயே ஆதீனத்தின் பெயரை பயன்படுத்தி பல குற்றச் செயல்களில் ஈடுபட்டார், ஆதீனத்தின் கையெழுத்தை போலியாக போட்டார்.
ஆவணங்களில் திருட்டுத் தனமாகவும், சட்ட விரோதமாகவும் மோசடி செய்து நித்யானந்தா என்னிடம் கையெழுத்து வாங்கினார். அந்த ஆவணங் கள் ஆதீனத்தை கட்டுப் படுத்தாது.
தன்னை மதுரை ஆதீன மடத்தின் அடுத்த மடாதிபதியாக அவர் அறி வித்தது செல்லாது. அவர் பலனடையும் விதத்தில் கோர்ட்டு உத்தரவிடக் கூடாது. அறக்கட்டளை ஒப்பந்தத்தில் நித்யானந்தா வின் ஆட்கள் மிரட்டி கையெழுத்து பெற்றனர். எனவே நித்யானந்தாவை கோர்ட்டு தண்டிக்க வேண்டும்.
எனது உயிருக்கு நித்யானந்தாவால் ஆபத்து உள்ளது. இது குறித்து போலீசில் புகார் அளித்துள்ளேன். அந்த விசாரணை நிலுவையில் உள்ளது. நித்யானந்தாவும் இளைய ஆதீனமாக இல்லை என அவரது இணைய தளத்தில் தெரிவித்துள் ளார். எனவே, இந்த வழக்கை விசாரிக்கத் தேவை யில்லை. தள்ளுபடி செய்ய வேண்டும்.
இவ்வாறு மதுரை ஆதீனம் குறிப்பிட்டுள்ளார்.
இதையடுத்து மனு மீதான விசாரணையை அடுத்த மாதம் (ஏப்ரல்) 1–ந்தேதிக்கு தள்ளி வைத்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்

0 comments: