Sunday, March 08, 2015

On Sunday, March 08, 2015 by Unknown in ,    
தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டப் பேரவைத் தேர்தலுக்கு அதிமுக, திமுகவிற்கு மாற்று அணியாக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் என காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் கேட்டுக் கொண்டார்.
காந்திய மக்கள் இயக்கத்தின் மாநிலப் பொதுக்குழு கூட்டம் மதுரை பசுமலையில் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் பங்கேற்ற அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
தேர்தலில் ஊழலை ஒழிக்க செலவுகளை மத்திய அரசே ஏற்க வேண்டும். பிரதமர் மோடி இலங்கை செல்வது வரவேற்கத்தக்கது. அதேசமயம் அவர் அங்குள்ள தமிழர்கள் நலன்காக்க வட கிழக்கு மாநிலங்களுக்கு நேரில் சென்று பார்வையிட வேண்டும். ஊழலை ஒழிக்க "லோக் ஆயுக்தா' சட்டத்தையும், பொதுச் சேவைகளுக்கான உரிமைச் சட்டத்தையும் தமிழக அரசு கொண்டுவர வேண்டும். தவறினால் அதற்காக காந்திய மக்கள் இயக்கம் மாநில முழுவதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும்.
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் எதிர்க்கட்சியினர் முதல்வர் கனவை மறந்துவிட்டு அதிமுக, திமுகவிற்கு மாற்று சக்தியாக ஒன்றிணைந்து தேர்தலை சந்திக்க வேண்டும். அதற்கு இப்போதே மக்கள் பிரச்னைகளை முன்னெடுத்து கூட்டாக போராட்டங்களை நடத்த வேண்டும். அந்த கூட்டணியில் காந்திய மக்கள் இயக்கமும் பங்கேற்கும். காந்திய மக்கள் இயக்கம் 2021 இல் தமிழகத்தின் தவிர்க்க முடியாக சக்தியாக உருவெடுக்கும் என்றார்.
செயற்குழுக் கூட்டத்தில் காந்திய மக்கள் இயக்க மாநிலத் துணைத் தலைவர்கள் கந்தசாமி, கோயில்பிள்ளை, பொருளாளர் குமரய்யா, பொதுச்செயலர் துரைக்கண்ணு, செய்தி தொடர்பாளர் ஜி. அய்யல்ராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்றன

0 comments: