Tuesday, March 17, 2015
On Tuesday, March 17, 2015 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சிராப்பள்ளி
ஜங்சன் மேம்பாலம்
கட்டுமானப் பணிகளை
மாவட்ட ஆட்சித்தலைவர்
பழனிசாமி அவர்கள்
பார்வையிட்டு ஆய்வு
திருச்சிராப்பள்ளி
மாவட்டம்ää ஜங்சன்
மேம்பாலம் கட்டுமானப்
பணிகளை மாவட்ட
ஆட்சித்தலைவர் பழனிசாமிääஇன்று
பார்வையிட்டு ஆய்வு
செய்தார்.
திருச்சிராப்பள்ளி
ரயில்வே சந்திப்பு
அருகில் தமிழ்நாடு
சிறப்பு காவல்படை
முதலாம் அணி
முகாம் சாலையில்
உள்ள பழமையான
மற்றும் குறுகலான
ரயில்வே பாலத்திற்குப்
பதிலாக திருச்சிராப்பள்ளி
சந்திப்பு மற்றும்
பூங்குடி ரயில்
நிலையங்களுக்கு இடையில்
6 வழி தட
அகலமுள்ள சாலை
மேம்பாலமும்ää ரூ.81.40
கோடி மதிப்பில்
இரண்டு கட்டங்களாக
அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
அதன்
முதல்கட்டமாக ரூ.
52.52 கோடி மதிப்பில் சாலை
மேம்பாலம் ரயில்வே
பாதைக்கு மேல்
தற்போதுள்ள குறுகிய
மேம்பாலத்திற்கு அருகில்
சென்னை - திண்டுக்கல்
சாலைää திருச்சிராப்பள்ளி-மதுரை
சாலை மற்றும்
மத்திய பேருந்து
நிலையத்தை இணைக்கும்
வகையில் மூன்று
வழித்தட அகலத்துடன்
அரிஸ்டோ ரவுண்டானா
உள்ள இடத்தில்
உயர்மட்ட சுற்றுப்பாலமாக
இரண்டு அடுக்கு
போக்குவரத்து வசதியுடன்
கட்டப்பட்டு வருகிறது.
இப்பணிகளை வருகின்ற
பிப்ரவரி 2017க்குள்
முடிக்க இலக்கு
நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இருப்பினும்
திண்டுக்கல்- அரிஸ்டோ
–
மத்திய பேருந்து
நிலையம் மற்றும்
திண்டுக்கல் - அரிஸ்டோ
–
திருச்சி ரயில்வே
சந்திப்பு ஆகியவற்றை
இணைக்கும் பாலப்பகுதியினை
ஓராண்டு காலத்திற்குள்
பொதுமக்கள் பயன்பாட்டிற்கு
கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது.
முதல்கட்டப்பணிகள்
முடிவடைந்தவுடன் போக்குவரத்தினை
முதல்கட்ட புதிய
பாலத்தில் அனுமதித்து
பின்னர் தற்போதுள்ள
பழைய பாலத்தினை
அகற்றி அந்த
இடத்தில் இரண்டாம்
கட்டமாக 3 வழித்தட
சாலை மேம்பாலம்
கட்டப்பட உள்ளது.
இப்பாலக்
கட்டுமானப் பணிகளை
பார்வையிட்ட மாவட்ட
ஆட்சித்தலைவர் பாலப்பணிகளுக்கு
இடையூறாக உள்ள
மின்கம்பங்கள்ää
குடிநீர் குழாய்கள்
மற்றும் பாதாள
சாக்கடை இணைப்புகளை
உடனடியாக மாற்றி
அமைத்து பால
கட்டுமானப்பணிகளை விரைந்து
முடிக்க சம்மந்தப்பட்ட
துறை தலைமை
அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
மேலும்ää சேவை
சாலைகள் அமைத்திட
நில ஆர்ஜிதம்
செய்வதற்கு விரைந்து
நடவடிக்கை எடுக்கப்படும்
என்றும்ää ரயில்வே
குடியிருப்புகள்ää
மண்டல பயிற்சிபள்ளிää
மனமகிழ் மன்றம்ää
ரயில்வே கூட்டுறவு
பண்டகசாலை உள்ளிட்ட
ரயில்வே இடங்களிலும்ää தொலைதொடர்பு
துறை இடம்ää ராணுவ
இடம் ஆகியவற்றில்
சேவைச்சாலை அமைத்திடவும்
சம்மந்தப்பட்ட துறை
அலுவலர்களுடன் விரைவில்
ஆலோசனைக் கூட்டம்
நடத்தப்படும் என்றார்.
மேலும்ää
மன்னார்புரம் சாலை
மற்றும் கிராப்பட்டி
சாலை ஆகிய
இடங்களில் பால
வேலைகளைத் தொடங்க
சிறப்புக் காவல்
படை நிலத்தில்
நான்குவழிச் சாலையினை
அமைத்து பின்னர்
பாலப்பணியினை தொடங்க
தமிழக உள்துறை
செயலாளர் மற்றும்
தமிழ்நாடு காவல்துறை
இயக்குநர் ஆகியோர்
தடையின்மைச் சான்றினை
வழங்கி உள்ளார்கள்.
இவ்விடத்தினை பார்வையிட்ட
மாவட்ட ஆட்சித்தலைவர்
சாலைப் பணிகளை
மேற்கொள்ள வருகின்ற
இரண்டு நாட்களுக்குள்
உள்நுழைவு அனுமதி
வழங்கப்படும் எனத்
தெரிவித்தார்.
இந்த
ஆய்வின் போது
மாவட்ட வருவாய்
அலுவலர் தர்ப்பகராஜ்ää
மாநகராட்சி ஆணையர்
விஜயலெட்சுமிää
நகரப்பொறியாளர் சந்திரன்ää
நெடுஞ்சாலைத்துறை உதவி
கோட்டப்பொறியாளர் பூங்கொடிää
உதவிப்பொறியாளர்கள் முத்துகுமார்ää
.நர்மதாää கோட்டாட்சியர்
கணேசசேகரன்ää மின்சாரவாரிய
செயற்பொறியாளர் ராஜேந்திர
விஜய்ää உதவி
செயற்பொறியாளர் ஏ.டி.சேகர்ää
உதவிப்பொறியாளர் சதீஸ்குமார்ää
மாநகராட்சி செயற்பொறியாளர்
பாலகுருநாதன்ää
செயற்பொறியாளர் நாகேஸ்
வட்டாட்சியர் ரவிச்சந்திரன்
உட்பட பலர்
உடனிருந்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
அவினாசி அவினாசி ஒன்றியம் கருவலூர் ஊராட்சியில் அனைத்து பகுதிகளிலும் தண்ணீர் கிடைக்காமல் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். கழிவுநீர் கால்வா...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
கற்பழிப்பு புகார் பெங்களூரு அருகே பிடதியில் நித்யானந்தா சாமியாரின் தியான பீடம் உள்ளது. அங்கு நித்யானந்தாவின் முன்னாள் பெண் சீடர் ஆர்த்தி ரா...
-
பெண்களுக்கு சவாலான காலகட்டம் நிலவுவதால் பள்ளிகளில் கராத்தே பயிற்றுவிக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்று திருச்சியில் கராத்தே பயிற்சியாளர்...
-
திருச்சி பழ வகை வணிகர்களின் நலச்சங்கம் சார்பில் அவசரக்கூட்டம் இன்று சங்கத்தின் தலைவர் முஹமத் பாரூக் தலைமையில் நடைபெற்றது ....
-
சென்னை பல்லாவரத்தை அடுத்து சங்கர் நகரில் உள்ள மளிகை கடையில் 10 அடி நீளமுள்ள கருநாகம் இருந்தது. இன்று (12.08.2013) அதிகாலையில் கடையைத் திற...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
0 comments:
Post a Comment